Header Ads



எனது இரத்ததில், விவசாய இரத்தம் ஓடிக்கொண்டுள்ளது - ஜனாதிபதி மைத்திரிபால

ஒரு விவசாயியின் மகன் என்ற வகையில் நான் பாடசாலைக்கும் சென்றிருக்கின்றேன், வயலுக்கும் சென்றிருக்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - கரடியனாற்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்தைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக அரசாங்கம் முக்கிய கவனத்தினை செலுத்தியுள்ளது. ஜனாதிபதி செயலகம் ஊடாகவும், கிழக்கின் அபிவிருத்திக்கு தேவையான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றது.

திருகோணமலை போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குளங்கள் வாவிகளை புனரமைப்பு செய்வதற்காக பெருமளவு நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளோம்.

திருகோணமலையில் வாவிகளை புனரமைப்பதற்கு இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டு சிறப்பான முறையில் அந்த வேலைத்திட்டங்கள் ஊழல் அற்ற வகையில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

அதேபோன்று மட்டக்களப்பிலும் குளம் மற்றும் வாவி புனரமைப்பு பணிகளுக்கு இராணுவத்தினரை பயன்படுத்துவதற்கு எண்ணியுள்ளேன். இதற்காக அனைவரது ஒத்துழைப்புகளும் வழங்க முடியும்.

முக்கியமான பாரிய பொறுப்பை விவசாய அமைச்சிடம் ஒப்படைக்க நான் உத்தேசித்திருக்கின்றேன். நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்காக பாரிய திட்டம் ஒன்றை தயாரித்துக் கொண்டோம்.

ஒரு விவசாயியினுடைய மகன் என்ற வகையில் நான் பாடசாலைக்கும் சென்றிருக்கின்றேன், வயலுக்கும் சென்றிருக்கின்றேன். எனது இரத்ததில் விவசாய இரத்தம் ஓடிக்கொண்டுள்ளது.

நான் கனவான் வாழ்க்கையில் இருந்தவன் அல்ல. வயலிலும் நீரோடையிலும் ஓடி நான் பணியாற்றியுள்ளேன். விவசாயம் தொடர்பில் எனக்கு கூடிய விரும்பமும் நெருக்கமும் உள்ளது.

தேசிய பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதில் சில சில குறைபாடுகள் காணப்பட்டன. தேசிய விவசாயத்தினை நவீனமயப்படுத்தவேண்டும்.தேசிய பொருளாதார சபையினை ஆரம்பிப்பதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

ஆசிய அபிவிருத்தி வங்கியும், உலக வங்கியும் நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். இதனை சிறப்பாக முன்னெடுக்கலாம் என்ற நம்பிக்கையெனக்கு உள்ளது.

ஐநா சபையும், உலக உணவுதிட்டமும் திட்டத்தினை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கு உதவுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.