Header Ads



"இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள், உன்னத குண நலன்களை கைவிட்டு விடக்கூடாது" - மத்தியவங்கி அறிவுரை

கிரிக்கெட் விளையாட்டை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுனர் எழுதிய கட்டுரையொன்றில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது. அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தலைசிறந்த வீரர்கள் ஓய்வு பெற்றுக் கொண்டதன் பின்னர் இளம் வீரர்களின் பங்களிப்புடன் இலங்கை கிரிக்கெட் அணி வீழ்ச்சியை கடந்து வருகின்றது.

இவ்வாறான ஓர் நிலையில் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் வழமையான உன்னத குண நலன்களை கைவிட்டு விடக் கூடாது. அவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளமை வருந்தத்தக்க விடயமாகவே காணப்படுகின்றது.

கிரிக்கெட் விளையாட்டுத் தொடர்பில் நிலவி வரும் ஸ்திரமற்ற நிலை இந்த பிரச்சினைகளை மேலும் நெருக்கடி மிகுந்ததாக மாற்றியுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டை பாதுகாத்துக் கொள்வது நாட்டின் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு மிகவும் அவசியமானது.

நாட்டின் நன்மதிப்பை பாதுகாத்துக் கொள்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்திக் கொள்ள முடியும். சில கிரிக்கெட் ரசிகர்களின் செயற்பாடு ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.