Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களின், அஸ்வர் ஹாஜியாருக்கான அனுதாபங்கள்..!

-அஜ்மல் முஹிடீன்-

ஒரு வரலாற்று பொக்கிஷம் தனது இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டு அமைதியாகி மறுமைக்கான பயணத்தை ஆரம்பித்து விட்டது. அன்னாருக்கு எமது பிரார்த்தனைகளை சமர்ப்பிப்பதே நமது கடமை,அதுவே எம்மை விட்டு இவ்வுலகத்தை விட்டு பிரிந்து செல்லும் அஸ்வர் ஹாஜியாருக்கு நாம் செய்யும் கைமாறு.

முஸ்லிம் கலாசார அமைச்சராக இருந்த போது "வாழ்வோரை வாழ்த்துவோம்" என்று மறைந்த பின் அல்ல வாழும் போதே வாழ்த்த வேண்டும் என்ற பண்பாட்டியலை நமக்கு அறிமுக படுத்தி பல முஸ்லிம் கலைஞர்களை வாழத்தி கௌரவமளித்தவர்,வரலாற்றில் பல விடயங்களை தேவையான இடங்களில் குறிப்பிட்டு பேசக்கூடிய ஒரு வரலாற்று பொக்கிஷம் அவர், 

சிறந்த மேடைப் பேச்சாளராக இருந்து ஒரு காலத்தில் அரசியல் மேடைகளை அலங்கரித்தவர்,இந்த நாட்டின் இரு ஜனாதிபதிகளுக்கு அரசியல் மேடைகளில் மொழிபெயர்ப்பாளராக உரையாற்றியிருக்கிறார், தான் யாருக்கு ஆதரவளிக்கின்றாரோ அவருக்கு நம்பிக்கைக்குரியவராக செயற்படகூடிய பண்பை கொண்டிருந்தார்,அதனால்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும்,பாராளுமன்ற தேர்தலிலும் முன்னால் ஜனாதிபதிக்கு ஆதரவாக,(தொன்னூறு வீதமான முஸ்லிம்கள் எதிர்த்து நின்ற நிலையிலும் )நம்பிக்கைக்குரியவராக செயற்பட்டார்.

யுத்தம் முடிந்தபின் யாழ்,சோனகதெருவுக்கு விஜயம் செய்த போது அறிஞர் ஏ.எம்.ஏ. அஸ்ஸீன் இல்லத்தை பார்வையிட்டு அவ் இல்லத்தை அஸீஸ் ஞாபகார்த்த இடமாக பாதுகாக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறியிருந்ததை " ஏ எம் ஏ அஸீஸ் பவுண்டேசனுக்கும்,அஸீஸ் குடும்பத்தாருக்கும் இத்தருணத்தில் ஞாபகமூட்டுகிறேன்.

இலங்கை நாட்டின் முஸ்லிம் அரசியல் வரலாற்றில் ஒரு அத்தியாயம் முற்றுப்பெற்று விட்டது.

அஸ்வர் ஹாஜியாரின் ஈடேற்றத்திற்காக பிரார்த்திப்போம்.

No comments

Powered by Blogger.