Header Ads



விலக்கப்பட்டார் விஜயதாச - ஜனாதிபதி அறிவிப்பு

விஜயதாச ராஜபக்ஸ, அமைச்சரவையில் வகிக்கும் அமைச்சுப் பதவி உள்ளிட்ட அதிகாரங்களை விலக்கிக் கொள்ளுமாறு கோரி ஐக்கிய தேசிய கட்சித் தலைமைத்துவம் ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்த கடிதத்துக்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். 

அதன்படி விஜயதாச ராஜபக்ஸவுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. 

இது தொடர்பான அறிவித்தல் ஜனாதிபதி செயலகத்தினால் நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக கூறினார். 

அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில், விஜயதாஸ ராஜபக்‌ஷ அமைச்சரவை தீர்மானங்களுக்கு எதிராக, அரசின் கொள்கைகளை விமர்சித்துக் கொண்டிருப்பதன் காரணமாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் அமைச்சரவை அதிகாரங்களை விலக்கிக் கொள்ளுமாறு ஐக்கிய தேசிய கட்சித் தலைமைத்துவம் ஜனாதிபதியிடம் நேற்று கோரியிருந்தது. 

3 comments:

  1. இலங்கையின் அண்மைக்கால சரித்திரம் - யார் யாரெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டார்களோ அவர்களெல்லாம் உரிய தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையானதே.

    பிரபாகரனும் அவனது கூட்டஙகளும், மகிந்தவும் அவரது படை பட்டாளங்களும்................. இப்படி விரிவடையும் பட்டியலில் இறுதியாக இந்த விஜயதாச.

    எனினும் இவன் ஞானம் இன்னும் பட்டியலில் இணைக்கப்படவில்லை. விரைவில் ஞானத்தையும் இந்தப்படியலுக்குள் அல்லாஹ் வரவைப்பானாக.

    ReplyDelete
    Replies
    1. Rishad Badiudeen and Hisbullah also need to be dismissed since they are always against Tamils and encourage the illegal settlement of muslims in north and east

      Delete
  2. For everybody's information: "Mills of God grinds slowly, but sure". Its a a lesson even for Muslim leaders who are cheating and destroying Muslims' image.

    ReplyDelete

Powered by Blogger.