Header Ads



ஊழல் நிவாரண பிரிவொன்றை நிறுவுவதற்கு தீர்மானம்

ஊழல் நிவாரண பிரிவொன்றை ஸ்தாபிக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த பிரிவை ஸ்தாபிப்பதன் ஊடாக இலஞ்சம் அல்லது மோசடி இடம்பெறுவதற்கு முன்னதாக அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன குறிப்பிட்டார்.

உலகின் முன்னேற்றமடைந்த நாடுகளில் இத்தகைய பிரிவுகள் இயங்குவதுடன், அவற்றின் ஊடாக ஊழல் மற்றும் மோசடிகளை தடுக்க முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஊழல் மோசடி ஏதேனும் இடம்பெறுமானால் ஊழல் நிவாரண புதிய பிரிவின் ஊடாக அதுகுறித்து முன்கூட்டி அறிந்துகொள்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

ஊழல் நிவாரண பிரிவின் ஊடாக அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகள் மற்றும் மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.