Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு, இலங்கை முஸ்லிம்கள் உதவுவார்களா..?


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு..

அன்பார்ந்த இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கும், புலம்பெயர்ந்து சர்வதேசமெங்கும் வாழும் முஸ்லிம்களுக்குமான பணிவான வேண்டுகோள். 

1990 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது யாழ் சோனகபுரம் பகுதியில் 3500 குடும்பங்களைச் சேர்ந்த 18000 பேர் வசித்தனர். தற்போது யுத்தம் முடிந்து மக்கள் மீள்குடியேறி வரும் நிலையில் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற முயற்சிகள் திட்டமிடப்பட்டு முறியடிக்கப்படுகின்றது. இதனால் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் பாடசாலைகள் உட்பட பொதுச் சொத்துக்கள் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளன. 

இந்த ஆபத்துக்களை தடுக்க யாழ்ப்பாணத்தில் மேலும் பல முஸ்லிம் குடும்பங்களை குடியேற்ற வேண்டிய தேவையுள்ளது. அத்துடன் சில அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. முஸ்லிம் பிரதேசத்தை பாதுகாக்கும் திட்டங்களின் ஓரம்சமாக காணியில்லாத மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் அமைத்துக் கொடுக்க வேண்டியுள்ளது. கடந்த 27 ஆண்டுகளில் குடும்பங்கள் பல்கிப் பெருகிவிட்டதால் காணிகள் இல்லாத ஆனால் மீளக்குடியேற விருப்பம் கொண்ட 2000 குடும்பங்கள் மீள்குடியேற்றத்துக்காக யாழ் மாவட்ட   செயலகத்தில் தம்மை பதிவுசெய்துள்ளனர். அவர்களில் 500 குடும்பங்களையாவது மீளக்குடியேற்றுவதன் மூலம் முஸ்லிம்களின் பாரம்பரிய பிரதேசத்தையும் அங்குள்ள 16 பள்ளிவாசல்களையும் பொதுச் சொத்துக்களையும் பாதுகாக்க முடியும்.

மீளக்குடியேற விண்ணப்பித்துள்ளவர்களில் காணியற்ற குடும்பங்களுக்கு அடுக்கு மாடி வீடமைப்புத் திட்டத்தை அமைக்க காணிகள் தேவையாகவுள்ளது. யாழ்ப்பாணத்தில் 4 பரப்புக்கு மேற்றபட்ட காணிகளை கொண்டவர்கள் யாராவது இத்திட்டத்துக்கு தங்கள் காணிகளை அன்பளிப்புச் செய்ய முன்வந்தால் அடுக்கு மாடி வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது இலகுவாக இருக்கும். 

ஆவ்வாறு காணிகள் இல்லாத வசதிவாய்புடைய செல்வந்தர்கள் அல்லது தொண்டு நிறுவனங்கள் இவ்வாறான காணிகளைப் பெற்றுக் கொடுத்தால் அதில் வீடுகளைக் கட்டிக் கொடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளது. 

எனவே இவ்வாறான உதவிகளை வழங்கும் நல்லுள்ளம் கொண்ட செல்வந்தர்கள் பரோபகாரிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இதற்கு தாராளமாக உதவ முன்வர வேண்டும்.

இதனூடாக முஸ்லிம்களுக்கெதிராக செயற்படும் சக்திகளின் சதித் திட்டஙகளை முறியடித்து மீள்குடியேற்றத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி இலங்கை முஸ்லிம்களின்  தாயகப் பூமியையையும் அதன் வரலாறு பாரம்பரியங்கள் என்பவற்றையும் பாதுகாக்கலாம். 

தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்

JANZAN 0773292430,   NOWSATH  0777588379

No comments

Powered by Blogger.