Header Ads



சயனைட் கலந்த ஊசியினால், மரண தண்­டனை கைதி சமிந்­தவை, கொலைசெய்யும் திட்டம் அம்பலம்

(எம்.எப்.எம்.பஸீர்)

பாரத லக்க்ஷமன் பிரே­ம­சந்­திர படு­கொலை வழக்கில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டு மரண தண்­டனை விதிக்­கப்பட்­டுள்ள பிர­பல பாதாள உலகக் குழுத் தலை­வ­ரான  தெமட்­ட­கொட சமிந்­தவை கொலை செய்ய வகுக்­கப்­பட்­டுள்ள இர­க­சியத் திட்டம்  அம்பலமாகியுள்ளது. துபா­யி­லி­ருந்து போதைப் பொருள் வர்த்­தகம் செய்யும்  மாகந்­துரே மதூஷ் தனது  போதைப் பொருள் இராச்­சி­யத்தை தக்க வைத்துக் கொள்ள இந்தக் கொலையை செய்ய திட்­ட­மிட்­டுள்­ளமை தொடர்­பி­லான தக­வல்­கள் பொலி­ஸாரின் விசா­ர­ணை­களிலிருந்து தெரிய வந்­துள்ளது.

கடந்த சனிக்­கி­ழமை நீர்­கொ­ழும்பு – குரண பகு­தியில் விசேட அதி­ரடிப் படை­யி­னரால் துப்­பாக்கிப் பிர­யோக சம்பவத்தில் பிடிக்­கப்­பட்ட ஆயுதக் குழு­வி­லி­ருந்த கடற்­ப­டை­யி­லி­ருந்து தப்பிச்  சென்ற  மாகந்­துரே மதூஷின் வலது கர­மான வஜி­ரவின் கீழ் செயற்­பட்ட பாதாள உலகக் குழு உறுப்­பினர் ரந்­தீவை பொலிஸார் கைது செய்­துள்ள நிலை­யி­லேயே இந்த இர­க­சி­யங்கள்  அம்­ப­லத்­துக்கு வந்­துள்­ளன.

களனி விசேட புல­னாய்வுப் பிரிவும் பேலி­ய­கொட விஷேட குற்றத் தடுப்புப் பிரிவும் இணைந்து முன்­னெ­டுத்த நட­வ­டிக்­கை­யி­லேயே குறித்த சந்­தேக நபர் கைது செய்­யப்பட்டு மேற்­படி இர­க­சியத் திட்டம் அம்­ப­லத்­துக்கு வந்­துள்­ளது. 

தெமட்­ட­கொட  சமிந்­த­வுக்கு எதி­ராக  புதுக் கடை நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெறும் புளூ­மென்டல் பகு­தியில் வைத்து நடத்­தப்­பட்ட துப்­பாக்கிச் சூடு தொடர்­பி­லான வழக்­குக்கு அவர் அழைத்து வரப்­படும் போது சிறைச்­சாலை பஸ் வண்­டியை மறித்தோ அல்­லது புதுக்­கடை நீதிவான் நீதி­மன்ற வளா­கத்­திலோ வைத்து இந்தக் கொலை திட்­டத்தை அரங்­கேற்ற திட்டம் தீட்­டப்­பட்­டுள்­ளமை பொலி­ஸாரின் விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.

சயனைட்  விஷம் கலந்த ஊசி மூலமோ அல்­லது துப்­பாக்கிச் சூடு நடத்­தியோ இந்தக் கொலையை செய்ய திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பி­லான தயார்­ப­டுத்­தல்­க­ளாக பொலிஸ் பரி­சோ­த­கர்கள் அணியும் சீரு­டையை ஒத்த சீருடை தொகுதி ஒன்றும் ரீ 56 ரக துப்­பாக்கி ஆகி­ய­வற்­றையும் ரந்­தீவின் கள்ளக் காத­லியின் வீட்டில் மறைத்து வைத்­தி­ருந்த போது பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர்.  

தோட்­டாக்கள்  மெகசின் மற்றும் 3 கைய­டக்கத் தொலை­பே­சிகள் ஆகி­ய­வற்­றையும் பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

No comments

Powered by Blogger.