Header Ads



பெரும் இழப்புகளைச் சந்திக்கவுள்ள, கிழக்கு மாகாணம்

20 ஆவது திருத்தச்சட்ட வரைவு சிறிலங்கா அரசாங்கத்தினால்  நிறைவேற்றப்பட்டால், கிழக்கு மாகாணமே பெரும் இழப்புகளைச் சந்திக்கும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின்  தேசிய ஒருங்கிணைப்பாளர் ரசங்க ஹரிச்சந்திர, இதுகுறித்து கருத்து வெளியிடுகையில்,

“ 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டால், கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் தமக்கான புதிய மாகாணசபையை தெரிவு செய்வதற்கு நீண்டகாலம் எடுக்கும்.

கிழக்கு மாகாணசபையின் ஆயுள்காலம் வரும் செப்ரெம்பர் 8ஆம் நாளுடன் முடிவடைகிறது.

இந்த ஆண்டில் இதற்கு தேர்தல் நடத்தப்படாவிட்டால்,  இங்குள்ள மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கு இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.