Header Ads



தீவிரவாதிகளுக்கு அதரவளிப்பதை, சவுதி நிறுத்த வேண்டும் - ஈரான்

ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் படைகளுக்கும் புரட்சிப் படையினருக்கும் நடந்து வரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். மத்திய கிழக்கு நாடுகளான ஏமன், சிரியா, ஈராக் மற்றும் லெபனானில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஈரான் மற்றும் சவுதி அரேபியா நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில், ஏமன் நாட்டு விவகாரங்களில் தலையிட்டு, தீவிரவாதிகளுக்கு சவுதி அரேபியா ஆதரவு அளித்து வருவதே ஈரான் - சவுதி அரேபியா நாடுகளுக்கிடையேயான உறவுகளுக்கு பெரும் தடையாக இருந்து வருகிறது. எனவே தீவிரவாதிகளுக்கு அதரவு அளிப்பதை சவுதி அரேபியா நிறுத்திக்கொள்ள வேண்டும், என ஈரான் அதிபர் ரவுஹானி அந்நாட்டு தொலைக்காட்சியில் பேசியுள்ளார். 

1 comment:

  1. He is telling the leagle Yemen govèrntment to be terrorist. Is this not enough for a proof that Iran is doing WHAT. It is the sponsor of terrorism in middle east in general.

    Followers of Abdullah Ibn Sabah the Munafik who initiated division among Muslims after the death of our beloved muhamed(pbuh).

    ReplyDelete

Powered by Blogger.