Header Ads



கத்தார் தொழிலதிபரின் தாராளம் - வாங்கப்பட்டார் நெய்மர், கால்பந்து உலகமே அதிர்ச்சி


பிரேசில் வீரர் நெய்மரின் சம்பளத்தை கேட்டு கால்பந்து உலகமே அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது .

பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த பிரேசில் வீரர் நெய்மரை ஒப்பந்தம் செய்ய பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 200 மில்லியன் பவுண்டு வழங்கியுள்ளது. இந்தத் தொகையை ஏற்க லலீகா தரப்பு மறுத்துள்ளது.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் தலையிட வேண்டுமென பி.எஸ்.ஜி அணி கோரிக்கை விடுத்துள்ளது.

கால்பந்து உலகில் வீரர் ஒருவரின் டிரான்ஸ்பருக்காக வழங்கப்பட்ட அதிகபட்சத் தொகை இதுவாகும். ஐந்து ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தத்தில் நெய்மருக்கு ஆண்டு தோறும் 26 மில்லியன் பவுண்டு சம்பளமாக வழங்கப்படும். பி.எஸ்.ஜி கத்தார் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் நாசர் அல் கெலஃபிக்குச் சொந்தமானது.

2011-ம் ஆண்டு இந்த அணியை வாங்கிய அவர் அதிகளவில் முதலீடு செய்து வருகிறார். இந்நிலையில் பி.எஸ்.ஜி அணி நிதி முறைகேட்டில் ஈடுபடுகிறது எனக் லலீகா அமைப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனினும் நெய்மர் பி.எஸ்.ஜி அணியில் இணைவதில் உறுதியாக இருக்கிறார். அவருக்கு டீம் மேட் மெஸ்ஸி, சுவாரஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.