Header Ads



விஜேதாசாவை நீக்குக - மைத்திரியிடம் கூறினார் ரணில்

மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேற்றிரவு அவசரமாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலரி மாளிகையில் நடந்த அரசாங்க தரப்பு நாடாளுமன்றக் குழுக் கூட்டத்துக்குப் பின்னர் இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டை பகிரங்கமாக விமர்சித்து, அமைச்சரவை கூட்டுப் பொறுப்பை மீறிவிட்டார் என்று இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து, பதிலளித்து உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதிலளிப்பதற்கு, விஜேதாச ராஜபக்சவுக்கு தாம், நேற்றுவரை காலஅவகாசம் அளித்திருந்ததாகவும், ஆனால் அவர் இதற்கு இணங்கவில்லை என்றும் கூறினார். நேற்றைய கூட்டத்தில் விஜேதாச ராஜபக்ச கலந்து கொள்ளவில்லை.

அதேவேளை, விஜேதாச ராஜபக்ச நீக்கப்பட்டால், 2020 வரை மாத்திரமல்ல, 2025 வரை இந்த அரசாங்கம் பதவியில் இருக்கும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இவர் மீது ஐதேக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று தமக்குத் தெரிய வேண்டும் என்று சி்ல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய கூட்டத்தில் கேள்வி எழுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.