Header Ads



இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில், போட்டியிடத் தயாராகும் கோடீஸ்வரர் - ஒட்டுமொத்த கடனையும் ஒரேநாளில் செலுத்த சபதம்

இலங்கையின் ஒட்டுமொத்த கடனையும் ஒரோ நாளில் செலுத்துவேன் என எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாராகும் கோடீஸ்வரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வார இறுதி சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Toyota, Honda, Volvo, BMW, Aston Martin, Opel, போன்ற பல வாகனங்களின் சென்சார் உற்பத்தி செய்கின்ற இலங்கை தொழிற்சாலையின் உரிமையாளரான ரொஹான் பல்லேவத்த என்பவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற தான் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு தேர்தலில் வெற்றி பெற்றால் இலங்கையின் மொத்த கடனையும் ஓரே நாளில் செலுத்தி விடுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளில் மாத்திரமின்றி உலக அமைப்புகள் பலவற்றில் இலங்கை கடன் பெற்றுள்ளது.

பிறக்கும் குழந்தைகள் உட்பட நாட்டிலுள்ள அனைவரும் தலையிலும் ஒரு லட்சம் ரூபாய் கடன் திணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கோடிஸ்வரர் குறிப்பிட்ட விடயம் நடந்தால் நன்மையாக இருக்கும் என பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

9 comments:

  1. முன் பின் தெரியதேவனுக்கு எங்கட ஒட்டு இப்போது நல்ல கேட்டு திங்கிறோம் .....இன்னும் அதே மாதிரி தொடர வேண்டுமென்றால் ஒட்டு போடுங்க!

    ReplyDelete
  2. இந்த புண்ணிய வானை கொண்டு வாருங்கள் எதிர்கால சந்ததிகள் நிம்மதியாக வாழட்டும்

    ReplyDelete
  3. We always with you Sir. Hats off...

    ReplyDelete
  4. முதலில் நம்நாட்டு கடனை அடையுங்கள் பின்பு தேர்தலில் போட்டியிடுங்கள் நாங்கள் உங்களை ஜனாதிபதியாக்கின்றோம் இந்த வழிமுறைமட்டும்தான் உங்கள் ஆசைக்கு தீர்வு!

    ReplyDelete
  5. Many have given promises in the past but most of them did not keep the promise after coming to the power. If he really ready to repay the loan , let him pay it first . Definitely people will keep him in power for this good work.

    Let us be wise with poly triks

    ReplyDelete
  6. He cannot close the loan of Sri Lanka within a day. He misleading the people of Sri Lanka as misled by other politician. Be causes with his words.

    See the reality of the world rather than the story. Trump is the example for it that he promised many but do nothing even he is a billionaire.

    ReplyDelete
  7. firs of all you do that then you are the king of our country

    ReplyDelete

  8. Well said if you pay off our debts you’re the KING no need any election

    Let media elaborate his ideology we don’t want to see another Trump face in SL

    ReplyDelete

Powered by Blogger.