August 15, 2017

முசலி முஸ்லிம்களே, உடனடியாக களத்தில் இறங்குங்கள்...


ஜனா­தி­ப­தி­யினால் வெளி­யி­டப்­பட்ட மாவில்லு பேணற்­காடு வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் முச­லிப்­பி­ர­தே­சத்தில் சுவீ­க­ரிக்­கப்­பட்ட காணிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கு ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு தனது அறிக்­கையை எதிர்­வரும் 21 ஆம் திகதி சமர்ப்­பிக்க வேண்­டி­யுள்­ளது. 

இதனால் முஸ்லிம் சமூக அமைப்­புகள், அர­சியல் குழுக்கள், சமூக ஆர்­வ­லர்கள் முசலி பிர­தேச காணிகள் தொடர்பில் தேவை­யான ஆவ­ணங்கள், தக­வல்கள், ஆதா­ரங்கள் மற்றும் மீள் குடி­யேற்றம் தொடர்­பான விப­ரங்­களை அக் குழுவுக்கு உடன் சமர்ப்பிக்குமாறு வேண்டப்படுகின்றனர்.

இது­வரை போதிய தக­வல்கள் குழு­வுக்கு கிடைக்­கப்­பெ­றா­மையால் முழு­மை­யான அறிக்­கையைச் சமர்ப்­பிப்­பதில் பல சிக்­கல்கள் உரு­வா­கி­யுள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

குறிப்­பாக  அப்­பி­ர­தே­சத்தில் மீள் குடி­யேற்­றத்­திற்­காக வர­வுள்ள குடும்­பங்­களின் எண்­ணிக்கை, அக்­கு­டும்­பங்­க­ளுக்குத் தேவை­யான காணிகள், காணிகள் எத்­தனை ஏக்கர் தேவைப்­ப­டு­கின்­றன, எந்த இடத்தில் காணிகள் வழங்­கப்­பட வேண்டும் எனும் விப­ரங்கள் ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட குழு­வுக்கு இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை என்று தெரி­விக்­கப்­ப­டு­வது கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

அத்­தோடு மீள்­கு­டி­யேறும் மக்­களின் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி, வாழ்­வா­தாரம் என்­ப­வற்­றுக்­காகத் தேவைப்­படும் வயல் நிலங்கள், விவ­சாய நிலங்கள் என்­ப­னவும் குழு­வுக்கு  சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. மேலும் மக்கள் வாழ்ந்த பழைய கிரா­மங்கள் எங்­கி­ருக்­கின்­றன, அந்தக் கிரா­மங்­களின் எல்லை, அங்­கி­ருந்த பாட­சா­லைகள், பள்­ளி­வா­சல்கள் போன்­ற­வற்றின் விப­ரங்­களும் இது­வரை வழங்­கப்­ப­டா­ததால் குழு அறிக்­கையை சமர்ப்­பிப்­பதில் பல சிர­மங்­களை எதிர்­நோக்­கி­யுள்­ள­தாகத் தெரி­ய­வ­ரு­கி­றது.

மீள் குடி­யேறும் மக்கள் தொழில் வாய்ப்­பு­களை பெற்­றுக்­கொள்ளும் வகையில் அமை­ய­வேண்­டிய கைத்­தொழிற் பேட்­டைகள் மற்றும் அவை நிறு­வு­வ­தற்­கான இடம் எங்­குள்­ளது என்­ப­னவும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

முசலிப் பிர­தேச மக்­களைச் சந்­தித்து தேவை­யான தக­வல்­க­ளையும், ஆவ­ணங்­க­ளையும் பெற்றுக் கொள்­வ­தற்கு குறிப்­பிட்ட குழு அப்­பி­ர­தே­சத்­திற்கு செல்­வ­தற்கு மக்­க­ளுக்கு நேர­டி­யாக அறி­விப்­ப­தில்லை. அப்­ப­குதி அர­சாங்க அதி­ப­ருக்கு அறி­விக்க, அர­சாங்க அதிபர் பிர­தேச செய­லா­ளர்கள் மூலம் கிராம உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு அறி­விப்­பதே வழக்­க­மாகும். கிராம உத்­தி­யோ­கத்­தர்­களே பொதுமக்­க­ளுக்கு அறி­விப்­பார்கள். இம்­முறை பின்­பற்­றப்­பட்­ட­தா­கவே தெரி­ய­வ­ரு­கி­றது.

இதே­வேளை அப்­ப­கு­தி­யி­லுள்ள சிங்­கள, தமிழ் மக்கள் தொடர்­பாக தேவை­யான ஆவ­ணங்கள், கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அறிய வருகிறது.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள குழு தனது அறிக்கையை 21 ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ளதால் இன்றுவரை முசலி மக்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளாது, தகவல்கள் வழங்காதுள்ள அரசியல் தலைவர்களும் சமூக அமைப்புகளும் நலன் விரும்பிகளும் உடனடியாக களத்தில் இறங்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ARA.Fareel

0 கருத்துரைகள்:

Post a Comment