Header Ads



கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுக்கு என்ன நடக்கிறது..?

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுக்கு என்ன நடக்கிறது என்பது தொடர்பாக ஆராய அமைச்சரவை உப குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

இந்தக் குழு நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவில், அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, விஜேதாஸ ராஜபக்ஸ மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரைக் காலமும் பல்வேறு சுற்றிவளைப்புகளின் மூலம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுக்கு என்ன நடந்தது என ஜனாதிபதி இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மேற்படி அமைச்சரவைக் குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

1 comment:

  1. It's too late now,they must found out the total number of cases & how they distroy them.also it should done in front of public

    ReplyDelete

Powered by Blogger.