Header Ads



பள்­ளி­வாசல் கட்­டிடம் சட்­ட­வி­ரோதமானதாம், கழிப்­ப­றை­களை திருத்த அனுமதி மறுப்பு - பிரதேச செயலாளர் அடாவடி

-விடிவெள்ளி-

தம்­புள்ளை ஹைரியா பள்­ளிவா­சலின் கழிப்­ப­றை­களில் சில திருத்த வேலை­களைச் செய்­வ­தற்கு பள்­ளி­வாசல் நிர்­வாகம் தம்­புள்ளை பிர­தேச செய­லா­ள­ரிடம் அனு­மதி கோரி­ய­போது தம்­புள்ளை பள்­ளி­வாசல் சட்­ட­வி­ரோத கட்­டிடம் என்­பதால் அனு­மதி தர இய­லாது என மறுத்­து­விட்­ட­தாக பள்­ளி­வா­சலின் உப செய­லாளர் எஸ்.எச்.எம். ரவூப் தெரி­வித்தார்.

பள்­ளி­வா­சலின் கழிப்­ப­றை­களின் கழி­வுகள் தேங்கும் குழி நிரம்பி வழி­வதால் சுகா­தா­ரத்­துக்குப் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் ரவூப், பிர­தேச செய­லா­ள­ரிடம் முறை­யிட்­ட­போதும் கழிப்­பறை திருத்த வேலை­க­ளுக்கு பிர­தேச செய­லாளர் மறுப்புத் தெரி­வித்­துள்ளார்.

பள்­ளி­வாசல் நிர்­வாகம் தம்­புள்ளை நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையை தொடர்பு கொண்டு இவ்­வி­வ­காரம் தொடர்பில் முறை­யிட்டும் அவர்­களால் எது­வித நட­வ­டிக்­கையும் எடுக்க முடி­யா­தெ­னவும் கொழும்பு தலைமைக் காரி­ய­ல­யமே நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தம்­புள்ளை பள்­ளி­வாசல் சட்­ட­வி­ரோ­த­மா­னது என பிர­தேச அரச அதி­கா­ரிகள் தெரி­வித்து வரு­வதால் பள்­ளி­வாசல் பிரச்­சி­னைக்கு உடனடியாகத் தீர்வு பெற்றுத் தருமாறு பள்ளிவாசல் நிர்வாகம் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

4 comments:

  1. The existence of this Masjid has been made as a controversial issue and therefore getting permission or approval from the local authority for renovation or extension is impossible until the settlement or solution is arrived for the main issue. We all have to work together to get this matter amicably settled and endorsed by all parties concerned.

    ReplyDelete
  2. எல்லா பள்ளிவாசல்களிலும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நல்லாட்சி வேண்டி விசேட துஹா பிரார்த்தனை செய்யுங்கோ!

    ReplyDelete
  3. எனக்கு ஒன்று மட்டும் விழங்கவில்லை ஏன் நீங்கள் துவா செய்து சிரியா யுத்ததை நிறுத்தி குழந்தைகளை காக்க முடியாதா பட்டினி சாவில் இருந்து சோமாலி முஸ்லீம்களை காக்க இயலாதா

    ReplyDelete
  4. There are many ways to skin a cat? Why not try an alternative way please.

    ReplyDelete

Powered by Blogger.