Header Ads



இராஜினாமா செய்ய, திலங்க மறுப்பு - வீரர்களின் பலவீனத்திற்கு நிர்வாகம் பொறுப்பல்ல என்கிறார்

கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் திலங்க சுமதிபால தனது பதவியை இராஜினாமா செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். 

இலங்கை கிரிக்கெட் அணி பெரும் தோல்விகளை கண்டுள்ள நிலையில், அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு திலங்க சுமதிபால தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் இலங்கை அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க கூறியதற்கு திலங்க சுமதிபால இவ்வாறு பதில் வழங்கியுள்ளார். 

"இராஜினாமா செய்வதற்கு எந்தக் காரணமும் இல்லை. வீரர்களின் பலவீனத்திற்கு ஒருபோதும் நிர்வாகம் பொறுப்பு கூற முடியாது" என்று திலங்க சுமதிபால கூறியுள்ளார். 

பெரும் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கை கிரிக்கெட் துறையை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு தேவையான நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விசேட ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் அனுப்பியிருந்தார். 

கிரிக்கெட் தொடர்பாக திறமை மற்றும் அனுபவம் இல்லாத நபர்கள் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் உயர் பதவிகளை வகித்து வருகின்ற காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கை கிரிக்கெட் துறையை காக்க வேண்டுமானால் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உடனடியாக கலைக்கப்பட வேண்டுமென்றும் அவர் தனது கடிதத்தில் கூறியிருந்தார். 

கடந்த 2016ம் ஆண்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக நியமனம் பெற்ற திலங்க சுமதிபால, நாட்டின் கிரிக்கட் விளையாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நீண்ட கால வேலைத் திட்டம் ஒன்றை செயற்படுத்தியுள்ளதாகவும், அதன் பிரதிபலனை அடைவதற்கு 3-4 ஆண்டுகள் ஆகும் என்றும் கூறியுள்ளார். 

1 comment:

  1. Hon Sumathipala,

    Cricket is our asset and the cricketers are our heroes. Please don't be adamant and help to get new blood infused in order to maintain 1996 as world champion.

    ReplyDelete

Powered by Blogger.