Header Ads



ஒபாமாவின் பிறந்த நாள், பொது விடுமுறையாகியது

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஒபாமாவின் பிறந்த நாளை பொது விடுமுறையாக அந்நாட்டில் உள்ள இல்லினாய்ஸ் மாகாண அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு முன்னதாக 1997-ம் ஆண்டு இல்லினாய்ஸ் மாகாணத்தில் தான் தனது அரசியல் வாழ்க்கையை ஒபாமா தொடங்கினார்.

இல்லினாய்ஸ் மாகாணத்தில் 2004-ம் ஆண்டு வரை செனட்டராக பதவி வகித்த ஒபாமா பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்று அமெரிக்க மக்களின் உரிமைகளுக்காக பாடுப்பட்டார்.

இந்நிலையில், ஒபாமாவை கெளரவப்படுத்தும் வகையில் அவரது பிறந்த நாளான ‘ஆகஸ்ட் 4’ திகதியை ‘பராக் ஒபாமா தினம்’ என கொண்டாடுவதுடன் பொது விடுமுறையும் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இல்லினாய்ஸ் மாகாண ஆளுநரான Bruce Rauner கடந்த ஆகஸ்ட் 4-ம் திகதி புதிய சட்ட மசோதாவில் கையெழுத்திட்டு இதனை சட்டமாக இயற்றியுள்ளார்.

இப்புதிய சட்டத்திற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

எதிர்வரும் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் திகதி முதல் இச்சட்டம் இல்லினாய்ஸ் மாகாணம் முழுவதும் அமுலுக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.