Header Ads



இலங்கை வரலாற்றில், இதயம் மாற்றிய முதல்பெண் - நலம் விசாரரித்த ராஜித்த

இலங்கையின் வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய அறுவை சிகிச்சை ஒன்று அண்மையில் கண்டி வைத்தியசாலையில் இடம்பெற்றது.

கண்டி வைத்தியசாலையில் முதல் முறையாக இடம்பெற்ற இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த கொண்ட பெண், தற்போது சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார்.

அனுராதபுரத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணுக்கே இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

 மூளைச் சாவடைந்த 22 வயதுடைய இளைஞனின் இதயம் அவருக்கு பொருத்தப்பட்டதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அந்த நோயாளியின் நலன் விசாரிப்பதற்காக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அங்கு சென்றிருந்தார். முதல் முறையாக குறைந்த வசதியின் கீழ் கண்டி வைத்தியசாலையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

 இந்த அறுவை சிகிச்சை, இலங்கையின் வரலாற்றில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.