Header Ads



இந்து - யூத திரு­மணம்


பிரித்­தா­னி­யாவில்  இந்து பெண்­ணொ­ரு­வரும் யூத இனத்தைச் சேர்ந்த பெண்­ணொ­ரு­வரும்  ஒரே­பா­லின திரு­மணம் செய்துள்­ள­தாக செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

கடந்த ஞாயிற்றுக்­கி­ழமை இந்து முறைப்­படி இடம்­பெற்ற இந்த திரு­மணம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

இவ்­வாறு வேறு இரு மத பிரி­வு­களைச் சேர்ந்த பெண்கள் ஒரே பாலின திரு­மணம் செய்து கொள்­வது  பிரித்­தா­னி­யாவில் இதுவே முதல் தட­வை­யென நம்­பப்­ப­டு­கி­றது.

 பிரித்­தா­னிய லெயி­செஸ்டர் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த கலா­வதி மிஸ்­ரியும் (48 வயது) அமெ­ரிக்க  டெக்ஸாஸ் மாநி­லத்தைச் சேர்ந்த மிரியம் ஜெப்­பர்­ஸ­னுமே இவ்­வாறு ஒரே பாலின திரு­மண பந்­தத்தில் இணைந்து கொண்­டுள்­ளனர்.

கலா­வ­தியும் மிரி­யமும் 20  வரு­டங்­க­ளுக்கு முன்னர் பயிற்சி வகுப்­பொன்றின் போது ஒரு­வ­ரை­யொ­ருவர் முதல் முத­லாக சந்­தித்து மனதைப் பறி­கொ­டுத்­தி­ருந்­தனர்.

மத ரீதியில் கடு­மை­யான ஆசா­ரங்­களைக் கடைப்­பி­டிக்கும் குடும்­ப­மொன்றைச்  சேர்ந்த கலா­வதி,  மிரி­யத்­து­ட­னான தனது காதலை பல வரு­டங்­க­ளாக தனது குடும்­பத்­தி­ன­ரிடம்  மறைத்து வந்­துள்ளார். சில வரு­டங்­க­ளுக்கு முன்­னரே அவ­ரது குடும்­பத்­தினர்  இது தொடர்பில் அறிந்து கொண்­டி­ருந்­தனர்.

இந்­நி­லையில் கடந்த பெப்­ர­வரி மாதம் டெக்ஸாஸ் மாநி­லத்தில் யூத முறைப்­படி  திரு­மணம் செய்து கொண்ட இந்த ஒரே பாலின ஜோடி தற்­போது இந்து முறைப்­படி திரு­மணம் செய்து  கொண்­டுள்­ளது.

திரு­ம­ணத்தை  நடத்தி வைக்க இந்து மத­குரு ஒரு­வரை தேடிக் கண்­டு­பி­டிப்­பதில் அவர்கள் கடும் சிர­மத்தை எதிர்­கொண்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ள கலாவதியும் மிரியமும் தமது எஞ்சிய வாழ்க்கையை டெக்ஸாஸ் மாநிலத்தில் கழிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

3 comments:

  1. Why do we need this sort of news

    ReplyDelete
  2. ச்சீ ... செய்தியை பார்க்கவே அருவருப்பாக
    உள்ளது

    ReplyDelete
  3. அடச்சே....
    இந்த செய்தியும் படங்ளும் சமூகத்துக்கு ரொம்ப தான் முக்கியம் போங்கள்...

    ReplyDelete

Powered by Blogger.