Header Ads



சுமணரத்னவின் கொலை வெறி..


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனக்கெதிராக  எவ்வித விசாரணையுமின்றி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்தமையைக் கண்டித்து இன்று -23- புதன்கிழமை மங்களராம விகாரையின் விகாரதிபதியான அம்பிட்டிய சுமணரத்ன தேரர்  பொலிஸாருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பொலிசாரின் உருவப் பொம்மையை அவரது விகாரை பகுதியில் வைத்து தீயிட்டு எரித்து எதிர்ப்பை தெரிவித்தார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கெவிலியாமடு விகாரையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மது போதையில் கடமையில் ஈடுபட்டபோது அவருக்கும் தேரருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினையடுத்து மங்களகம பொலிஸ் நிலைத்திற்கு சென்று தோர்  முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பொலிசாரை கைதுசெய்து சட்டவைத்திய பரிசோதனையில்  மதுபோதையில் இருந்ததாக சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனையடுத்து குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் கடமையில் ஈடுபட்டுவருகின்றார்.

இந்த நிலையில் தேரர் தன்னை அடித்ததாக தேரருக்கு எதிராக குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். 

இதேவேளை  வேறு ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தோர் தன்னை அடித்ததாகவும் வைத்தியசாலையில் தான் அனுமதிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பில் தேரர் தெரிவிக்கையில், 

சம்பவம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது இது தொடர்பாக பொலிசார் வாக்கு மூலம் எதுவும் பெறவில்லை. இதேவேளை அப்பாவி மக்களுக்காக குரல் கொடுத்ததினால் நான் உயிர் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், எனக்கும் விகாரைக்கும் பாதுகாப்பு கொடுக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதனால் பொலிசார் மீது எவ்விதமான நம்பிக்கையும் இல்லாமல் போயுள்ளதுடன் இது எனக்கு எதிராக பொலிசாரால் சோடிக்கப்பட்ட செயல் எனவும் குறித்த செயலை வன்மையாக கண்டிப்பதுடன் இதற்கு எதிராக பொலிசாரின் உருவப் பொம்மையை எரித்து எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் தேரர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.