Header Ads



இலங்கையில் சுனாமி ஆபத்து இல்லை - அனர்த்த முகாமைத்துவ நிலையம் சற்றுமுன் அறிவிப்பு

இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவுகளுக்கு அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கையில் சுனாமி ஆபத்து இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

சுமாத்திரா தீவில், 6.5 றிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமையால், இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுனாமி நிச்சயமாக ஏற்படும் என்று யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் பொதுமக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்பதற்காக மாத்திரமே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளரும்  ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பீலி கூறினார்.

இது தொடர்பான அறிவித்தல்களை ஊடகங்கள் வாயில்களாக மக்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் இதனால், மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சுமாத்திரா தீவில், 35 கிலோமீற்றர் ஆழத்திலேயே, இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.