Header Ads



சவுதியில் பாதுகாப்பு தீவிரம் - ஹஜ்ஜாஜிகளை வரவேற்கவும், பாதுகாக்கவும் நடவடிக்கை


ஹஜ்ஜாஜிகளின் நலன்கள் மற்றும் ஹஜ் விவகாரங்களை கவனிப்பதட்கான விசேட படையணியின் செயல்பாடுகள் சவுதி அரேபியாவின் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான முடிக்குரிய இளவரசர் முஹம்மத் இப்னு சல்மானின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் உள்விவகார அமைச்சர் அப்துல் அஸீஸ் இப்னு ஸுஊத் பின் நாயிப் அவர்களும் கலந்துகொண்டார்கள் 

ஹஜ்ஜாஜிகளை வரவேற்கவும்  பாதுகாக்கவும்  அல்லாஹ் சவுதி அரேபிய அரசாங்கத்துக்கு நல்லதொரு வாய்ப்பை தந்துள்ளான் எனவே ஹஜ்ஜாஜிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உயர்ந்தபட்ச ஏட்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மக்கா ,மதீனா ,உட்பட புனித தளங்களில் உயர்ந்த பட்ச பாதுகாப்பு ஏட்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்  உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார். அத்துடன் ராணுவ ஒத்திகையையும் முன்வைக்கப்பட்டது. சவுதி அரேபியாவில் உள்ள அணைத்து படைப்பிரிவுகளும் இதில் கலந்து கொண்டார்கள் தீயணைப்பு ,பயங்கரவாத தாக்குதல் , கடத்தல் ,..போன்ற அணைத்து தாக்குதல்களையும் எதிர்கொள்ள இராணுவம் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது .

ஹஜ் தொடர்பான தகவல்களை சவுதி அரேபியாவில் இருந்து பகிர்ந்துகொள்கிறேன் .
ஜித்தாவிலிருந்து யூ .கே . ரமீஸ்

1 comment:

  1. ماشاء الله
    இத்தகவலை தந்தமைக்கு எமது பேராசிரியர் யூ.கே. ரமீஸ் அவர்களுக்கும்,jaffnamuslim பத்திரிகைக்கும் மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.