Header Ads



அபுதாபியில் இலங்கையரின் மனிதாபிமானச் செயல் -

அபுதாபியில் பணியாற்றும் பெண்ணொருவர் செய்யும் மகத்தான சேவை தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

புற்றுநோய் நோயாளர்களுக்கு வழங்கப்படும் கீமோதெரபி சிகிச்சையினால் முடி உதிர ஆரம்பிக்கும் போது, அது அவர்களின் சுய மதிப்பில் தாழ்வு நிலையை ஏற்படுத்தும்.

இந்த நிலையில் அபுதாபியில் உள்ள இலங்கை மருதாணி கலைஞர், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் தலைகளில் அழகான மருதாணி கிரீடம் வரைந்து அவர்களின் நம்பிக்கையை வலுவடைய உதவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் இந்த சேவையினை இலவசமாகவே மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாத்திமா ரபியா என்ற இலங்கை பெண் தனது பிறந்த நாளில் ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென எண்ணி இந்த நல்லெண்ண சேவையை ஆரம்பித்துள்ளார்.

பின்னர் அவர் தனது சேவையை வழங்க நோயாளர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களை சந்தித்து இந்த சேவையை வழங்கி வருகிறார்.

முன்னாள் முதன்மை பாடசாலை ஆசிரியரான ரபியா பல ஆண்டுகளாக மருதாணி கலைஞராக செயற்பட்டு வருகின்றார்.

அவருடைய நிபுணத்துவத்தைப் பார்த்த, நண்பர் ஒருவர் தனது மாடலிங் திட்டத்தின் ஒரு பகுதியில் இணையுமாறு கோரியுள்ளார். இதன் போதே அவர் இந்த மருதாணி கிரீடத்தை பரிந்துரைத்துள்ளார்.

அதற்கமைய இந்த திட்டம் வெற்றியளித்துள்ளதாகவும், அவர் இதனை ஒரு சேவையாக செய்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மருதாணி கிரீடம் மக்களை அழகாக காட்டுவதனால், அவர் அதையே செய்து வருகிறார்.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்த கிரீடம் மிகவும் பிரபலமாக உள்ளன. இதனை இலங்கையிலும் அணுகுவதற்கு ரபியா விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.