Header Ads



இலங்கை கிரிக்கெட், பயிற்சியாளரின் குமுறல்..!

இலங்கை கிரிக்கெட் அணியை மீள் எழுச்சி பெறச் செய்யும் தனது முயற்­சியை பலரின் தலை­யீ­டுகள் பாதிப்­ப­தாக இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்­காலப் பயிற்­றுநர் நிக் போதாஸ் தெரி­வித்தார்.

இந்­தி­யா­வுக்கு எதி­ராக ரங்­கிரி தம்­பு­ளையில் நடை­பெற்ற முத­லா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் இலங்கை படு­தோல்வி அடைந்த பின்­னரே அவர் இதனைக் கூறினார்.

போட்­டியின் ஆரம்பக் கட்­டத்தில் ஒரு விக்­கெட்டை மாத்­திரம் இழந்து 139 ஓட்­டங்­களைப் பெற்று பல­மான நிலையில் இருந்த இலங்கை அணி எஞ்­சிய 9 விக்­கெட்­களை 77 ஓட்­டங்­க­ளுக்கு இழந்­தது. அத்­துடன், ஷிக்கர் தவான், விராத் கோஹ்லி ஆகி­யோரின் அதி­ர­டியின் பல­னாக 9 விக்­கெட்­களால் இலங்கை தோல்­வியைத் தழு­வி­யது.

இந்தத் தோல்­வியால் மனம் நொந்­து­போன சில இர­சி­கர்கள் தங்­க­ளது அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­ய­துடன், இலங்கை அணி­யி­னரின் பஸ் வண்­டிக்கு முன்னால் கூடி தமது எதிர்ப்­பையும் வெளி­யிட்­டனர்.

இதனை அடுத்து பொலிஸார் தலை­யிட்டு இர­சி­கர்கள் குழுவை அப்­பு­றப்­ப­டுத்­தி­ய­துடன் இலங்கை அணி­யி­னரின் பஸ் வண்­டி­யையும் வழி­ய­னுப்பி வைத்­தனர்.

இந்தத் தோல்­வி­யா­னது மனதைப் புண்­ப­டுத்­து­வ­துடன் மனக் குழப்­பத்­தையும் தோற்­று­விக்­கின்­றது என போத்தாஸ் கூறினார்.

‘‘இந்தத் தோல்­வியால்் ஆத்­தி­ர­வ­சப்­ப­டு­வது இயல்பு. ஆனால் வீரர்கள் மீது நான் ஆத்­திரம் கொள்­ள­வில்லை.

அவர்­க­ளிடம் கோரப்­படும் அள­வுக்கு அதி­க­மாக அவர்கள் கடு­மை­யாக உழைக்­கின்­றனர். அவர்கள் சிறந்­த­வர்கள். அணியின் உத­வி­யா­ளர்­களும் தங்­க­ளா­லான சக­ல­தையும் செய்­கின்­றனர்.

அவர்கள் நேரம், காலம் பாராமல் உழைப்­ப­துடன் வீரர்­க­ளுடன் இணைந்து திட்­டங்­க­ளையும் வகுக்­கின்­றனர். வீரர்­களின் தங்­கு­ம­றையில் யாரும் தவ­றி­ழைக்­க­வில்லை.

உண்­மையில் எம்மால் திற­மையை வெளிப்­ப­டுத்த முடி­யாமல் போனது. இதனால் ஆத்­தி­ர­வ­சப்­ப­டத்தான் செய்வோம். ஆனால், பல­ரது தலை­யீ­டுகள் தான் இதுற்கு காரணம் என்­பதை திட்­ட­வட்­ட­மாகக் கூறலாம்’’ என்றார் போத்தாஸ்.

தனக்கு உரிய ஆளுகை வழங்­கப்­பட்டால்  அணியின் முன்­னேற்­றத்­திற்­கான சரி­யான கால எல்­லையை வரை­ய­றுக்க முடியும் எனவும் ஆனால், அதற்­கான சூழ்­நிலை இங்கு இல்லை எனவும் அவர் தெரி­வித்தார்.

‘‘அணி மீதான பொறுப்பும் கட்­டுப்­பாடும் எனக்கு இருந்தால் எம்மால் ஒரு கால­வ­ரை­ய­றையை கூற முடியும். ஆனால் தொட்­ட­தற்­கெல்லாம் மற்­ற­வர்­க­ளையும் கேட்­க­வேண்­டி­யுள்­ளது. என்னைப் பொறுத்­த­மட்டில் எங்­களைத் தனி­யாக விட்­டு­விட்டால், இந்த வீரர்­க­ளுடன் இணைந்து செயற்­பட அனு­ம­தித்தால் அடுத்த ஆறு மாதங்­களில் அணியை உறு­தி­யான நிலைக்கு இட்டுச் செல்ல முடியும்.

அத்­துடன், திற­மையும் தொடரும்’’ என போத்தாஸ் மேலும் தெரி­வித்தார்.‘‘வீரர்கள் உண்­மையில் இயல்­பா­கவே திற­மை­சா­லிகள். அவர்­க­ளுக்கு கால அவ­காசம் வழங்­கு­வ­துடன் நேசத்­தையும் பாசத்தையும் பொழிந்து அவர்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டி எழுப்பினால் பெறுபேறுகளை விரைவில் காணலாம்’’ என்றார் அவர். மேலும், அணியில் தொடர்ச்சியாக இடம்பெறும் மாற்றங்களும் அணியின் திறமையைப் பாதிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.