Header Ads



ஆட்டின் தலையை சமைக்காத மனைவிக்கும், தன்னைவிட வேகமாக நடந்த மனைவிக்கும் விவாகரத்து

தற்போது, சவுதியில் சிறு பிரச்சனைகளுக்காக கூட விவாகரத்து நடப்பது அதிகரித்துள்ளது என திருமணங்களை நடத்தி வைக்கும் ஹுமூத் அல் ஷிம்மாரி என்பவர் தெரிவித்துள்ளார்.

கணவர் ஒருவர் தனது வீட்டிற்கு விருந்திற்காக நண்பர்களை அழைத்து வந்துள்ளார், அதில், ஆட்டின் தலையை சமைத்து தருமாறு கூறியுள்ளார். அதனை மனைவியை சமைத்து வைக்காத காரணத்தால், நண்பர்களின் முன்னிலையில் என்னை நீ அவமானப்படுத்திவிட்டாய் என கூறி மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

மற்றொரு நபர், தனது மனைவியுடன் நடந்து செல்கையில் தன்னை விட வேகமாக நடந்து சென்றார் என்ற காரணத்திற்காக விவாகரத்து செய்துள்ளார்.

மரபுகளை மீறிய நடைமுறைகள், நவீன வளர்ச்சியால் மாறுபட்டுள்ள மனிதனின் மனப்போக்கே காரணமாகவுள்ளது என் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.