Header Ads



இலங்கை ரசிகர்கள் கொந்தளிப்பு, மைதானத்தில் பரபரப்பு

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியின் போது பார்வையாளர்கள் போட்டிக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.

பார்வையாளர்கள் இடையூறு விளைவித்தமையினால் சுமார் அரை மணித்தியாலம் போட்டி தடைப்பட்டுள்ளது.

கண்டி பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.

இலங்கை அணி அண்மைக் காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்ற நிலையில், இன்றைய தினமும் இலங்கை அணி இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவும் நிலையை அடைந்த காரணத்தினால் இரசிகர்கள் அதிருப்தியை வெளியிட்டு போட்டிக்கு தடை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்திய அணியின் இன்னிங்ஸின் 44ஆம் ஓவரில் இவ்வாறு தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

சுமார் இருபது நிமிடங்கள் வீரர்களும் நடுவர்களும் மைதானத்தில் போட்டியை ஆரம்பிக்க காத்திருந்தனர்.

எனினும், நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத காரணத்தினால் வீரர்களும் நடுவர்களும் விளையாட்டு அரங்கிற்குள் திரும்பியிருந்தனர்.

அதன் பின்னர் மீளவும் வீரர்கள் மைதானம் திரும்பி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி இலகு வெற்றியீட்டி தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் இரசிகர்கள் போத்தல்களையும் பல்வேறு பொருட்களையும் மைதானத்திற்குள் வீசி எறிந்து கலகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2 comments:

  1. Spectators feelings were very reasonable and they wanted to findout who is responsible for the present status of Srilankan cricket.

    Please don't forget that we were world champion and were on the top.We have to find the corrective measure for the present status of cricket immediately before it get worsen.

    ReplyDelete
  2. What next? Attacking player's residences? Sri Lankan cricket fans had gone down to the level of Indians and Pakistanis. Shame.

    ReplyDelete

Powered by Blogger.