Header Ads



இலங்கை பள்ளிவாசல் நிர்வாகிகளே, சவூதியில் பாங்கை கேட்டு பாருங்கள்..!

சவூதியில் பாங்கை கேட்டு பாருங்கள் இனிமையாக இருக்கும் இலங்கை போன்றல்ல என இந்து மத சகோதரன் லுஹர் நேரத்தில் என்னிடம் கூறினார். 

அவர் 2 வருடமாக அங்கு கூலி தொழிலாளியாக பணிபுரிந்துள்ளாராம்

சரி விஷயத்துக்கு வருகின்றேன் ...

எமது பகுதியில் ,வெளியூர் பகுதிகளில் பல அழகிய பள்ளிவாயல் உள்ளன ஆனால் இனிமையாக பாங்கு / அதான் சொல்ல படுகின்றதா என கேட்டால் கேள்வி குறிதான்.

முஅத்தீன்மார்கள் பாங்கு சொல்லும் நேரத்தை பார்த்தால் உடனே பாங்கை எப்படியோ சொல்லிமுடித்துவிடுவார்கள் இனிமை ,மகிமை முக்கியமல்ல ஏதோ அவர்களின் கடமை முடிந்துவிட்டது.

காரணம் அவர்களுக்கு பல வேலைகள் வெளியிலும் உள்ளன அதையும் செய்யவேண்டும் ஏன் என்றால் பள்ளியில் கொடுக்கும் வருமானம் போதாது என்பார்கள் ஏற்றுக்கொள்ள கூடிய விடயம்தான்.

நீங்கள் என்னை நோக்கி சில கேள்விகளை மனத்துக்குள் கேட்ப்பீர்கள் பள்ளிவாயலில் நிர்வாகம் செய்து பார் முஅத்தீன் எடுக்கப்படும் கஷ்டம் புரியும் உனக்கு இனிமையான பாங்கு கேட்குது என உள்ளத்தில் தோன்றலாம் ஆம் உண்மைதான் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

இந்த புனிதமான பணிக்கு வருபவர்கள் பெரும்பாலும் 40 -55 வயதுடையவர்கள் தான் அதிகம் இளைஞ்சர்கள் வருவதில்லை காரணம் ஒரு சிலவற்றை கூறுகின்றேன்
எம் சமூகம் முஅத்தீன்களை பெரும்பாலும் கௌரவிப்பதில்லை
அவர்களின் சேவையை பாராட்டி ஒரு விழா செய்ய முன்வருவதில்லை
அவர்களுக்கு ஊதியம் அதிகம் கொடுப்பதில்லை 
அவர்களுக்காக சுய தொழிலை பெற்றுக்கொடுக்க முன்வருவதில்லை
இதனால் இளைஞ்சர்கள் இந்த பணியை புறக்கணிக்கின்றனர் இதனால் வயோதிபர்கள் இந்த பணிக்கு வருகின்றனர்.

தையல் தொடக்கம் சமையல் வரை ஊரில் அனைத்துக்கும் பயிற்சி நெறிகள் உள்ளன ஆனால் முஅத்தீன்களுக்கு பயிற்சி கூட இல்லை குறைந்தது 6 மாதம் பாங்கு சொல்லும் பயிற்சி வழங்கி சான்றிதழ் கொடுக்கவேண்டும்.

சிறந்த முறையில் பாங்கு சொல்லும் முஅத்தீன்களுக்கு சன்மானம் அல்லது ,ஹஜ் டிக்கெட் அல்லது உம்ரா டிக்கெட் வழங்கப்படும் என ஊரின் பெரியபள்ளிவாயல் ஒரு திட்டத்தை செய்தால் நிச்சயம் அனைத்து முஅத்தீன்களும் கவனமெடுத்து இனிமையான முறையில் சொல்ல ஆரம்பிப்பார்கள்
மக்களின் காதுகளுக்கு இனிமையாக சென்றடைவதோடு இந்த பணிக்கு இளைஞ்சர்களும் முன்வருவார்கள்.

அடுத்தது இறையில்லத்தில் தூசுகளோ அல்லது பறவையின் எச்சத்தை கண்டால் கூட ஒரு சிலர் முஅத்தீன் துப்பரவு செய்யுங்கள் என கூறிவிட்டு போய்விடுவார்கள் அதை சொல்பவர்கள் செய்தால் ஏதுவும் குறைய போவதில்லை அல்லாஹ்வின் வீடு எமக்கும் பங்குள்ளது.

முஅத்தீன் துப்பரவு தொழிலாளி அல்ல அதான் சொல்ல வந்தவர்கள் ஆனால் அவர்கள் அதையும் செய்கின்றனர் அதற்காக அவர்கள் செய்யவேண்டும் என நினைக்க வேண்டாம் நீங்களே உங்களுக்கு முடியானவற்றை செய்து நன்மையை கொள்ளையடியுங்கள் அதில் கௌரவம் பார்க்கவேண்டாம் அல்லாஹ்வின் வீடு.

அரபு நாடுகளில் முஅத்தீன்களுக்கு கொடுக்கும் கௌரவத்தை போல இலங்கையிலும் எம்சமூகமும் அவர்களுக்கு மதிப்பை கொடுக்க முன்வரவேண்டும் இன்ஷா அல்லாஹ் அவ்வாறு செய்தால் இனிமையான முறையில் பாங்கை கேட்கலாம்

-ஸபா ரௌஸ் கரீம்-

3 comments:

  1. I have read, some schcoler have said "we can't appoint a muaddin on wages bass"
    On the other hand it is very sad, we have seen Lott of arguments ant fighting inside the musjid for small small religious matters. But we are lack of giving to get to the fist raw in a prayers and
    saying Addan . These actions gives lots of rewards.
    Finally. Saying Adan can done by any one , its not necessarily by a musddin. Rather by a mussalli

    ReplyDelete
  2. Very simple thing...
    நான் சவூதியில் தான் இருக்கிறேன்..
    இங்கே முஅத்தின் என்பதை விட உதவி இமாம் என்பவர்கள் தான் இருக்கிறார்கள்...
    பெரீய்ய மஸ்ஜித்களைத் தவிர.
    இங்குள்ள இமாம்கள் இலங்கையில் போல அதான் சொல்லத் தயக்கம் காட்டுவதில்லை.
    இலங்கையில் மஸ்ஜித்களின் வருமானம் மிகக் குறைவு.
    இமாமே அதான் சொல்வதையும் பொறுப்பெடுத்தால்
    இமாமின் வருமானமும் கூடும்....
    அதான் இனிமையாகவும் இருக்கும்...
    கூட்ட துடைக்க part time ஆள் எடுக்கலாம்..
    நாளைக்கு ஒரு trusty பாரம் எடுக்கலாம்...
    ஆர்வமுள்ள ஊராருக்கு மாதத்தில் ஒரு நாள் கொடுக்கலாம்

    ReplyDelete

Powered by Blogger.