Header Ads



தங்கத்தின் விலை குறைவடைந்தது

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் தடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, நேற்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,257 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இது கடந்த இரண்டு வாரங்களில் பதிவான குறைந்தபட்ச விலை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலரின் பலவீனமே தங்கத்தின் விலை குறைவுக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்வார்கள். ஒரு அவுன்ஸ் என்பது 32 கிராம், அதாவது நான்கு சவரன். இது சொக்கத் தங்கம், 24 கரட் தங்கம் ஆகும்.

இலங்கையில் இன்றைய தினத்தில் தங்கத்தின் விலை நிலவரம்..

தங்கம் அவுன்ஸ் - 193,695 ரூபாய்

24 கரட் ஒரு கிராம் தங்கம் - 6,840 ரூபாய்

24 கரட் 8 கிராம் தங்கம் (1 Pawn) - 54,700 ரூபாய்

22 கரட் 1 கிராம் தங்கம் - 6,270 ரூபாய்

22 கரட் 8 கிராம் தங்கம் (1 Pawn) - 50,200 ரூபாய்

21 கரட் 1 கிராம் தங்கம் - 5,990 ரூபாய்

21 கரட் 8 கிராம் (1 Pawn) - 47,900 ரூபாய்

இலங்கை நிலவரப்படி கடந்த 4ஆம் திகதி தங்கம் அவுன்ஸ் 195,067 ரூபாயாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.