Header Ads



உள்­ளூ­ராட்சி தேர்தல், எமக்கு மிகவும் முக்­கி­ய­மாகும் - கபீர்

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர்­வரும் டிசம்பர் மாதம் நடத்­தப்­படும். இதன்­படி ஒக்­டோபர் மாத இறு­திக்குள் கிராம மட்­டத்தில் கட்சி கிளை சங்­கங்கள் நிறுவும் செயற்­பா­டுகள்   பூர்த்தி செய்­யப்­பட வேண்டும். உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றால் மாத்­தி­ரமே தேசிய அர­சாங்­கத்தின் அடுத்த இரண்டு வருட பய­ணத்தை வெற்­றி­க­ர­மாக கொண்டு செல்ல முடியும். தேசிய அர­சாங்­கத்தின் பயணம் எமது கைக­ளி­லேயே உள்­ளது என ஐக்­கிய தேசியக் கட்­சியின் தொகுதி அமைப்­பா­ளர்கள் கூட்­டத்தில் அக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாசிம் தெரி­வித்தார்.

தொகுதி மட்­டத்தில் உள்ள பிரச்­சி­னை­க­ளை­யும் குறை்பா­டு­களையும் தீர்ப்­ப­தற்கு ஒரு மாத அவ­காசம் தரு­கின்றோம். அவ­கா­சத்தின் பின்னர் உரிய முறையில் செயற்­ப­டாத தொகு­தி­க­ளுக்கு சிறி­கொத்தா உயர்­பீடம் தலை­யிட்டு தொகுதி நட­வ­டிக்­கை­களை பொறுப்­பேற்கும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள 160 தேர்தல் தொகுதி அமைப்­பா­ளர்­களும் கட்­சியின் செயற்­பாட்­டா­ளர்­களும் நேற்று கொழும்­புக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர். இந்த கூட்டம்  நேற்று பிட்ட கோட்­டேயில் அமைந்­துள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நடை­பெற்­றது.

இதன்­போது ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதி தலை­வரும் அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தாஸ, கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாசிம், அமைச்­சர்­க­ளான அகிலவிராஜ் காரி­ய­வசம், கயந்த கரு­ணா­தி­லக ஆகியோர் முன்­னிலை வகித்து கூட்­டத்தை நடத்­தினர்.  இந்த கூட்­டத்தில்  வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க சமுக­ம­ளிக்­க­வில்லை. 

 இதன்­போது தொகுதி அமைப்­பா­ளர்­களின் கூட்­டத்தில் அடுத்த கட்ட செயற்­பா­டுகள் குறித்து கட்­சியின் பொதுச்­ செ­ய­லா­ளரு அமைச்­ச­ரு­மான கபீர் ஹாசிம் நீண்ட விளக்­கத்­தையும் எச்­ச­ரிக்­கை­யையும் விடுத்தார்.

அமைச்சர் கபீர் ஹாசிம் தொகுதி அமைப்­பாளர் முன்பு உரை­யாற்­று­கையில்,

ஐக்­கிய தேசியக் கட்­சியின் கிராம மட்ட செயற்­பா­டு­களும் கிளை சங்கம் நிறுவும் ஏற்­பா­டு­களும் கடும் மோச­மாக உள்­ளன. அத்­துடன் கட்­சிக்கு அங்­கத்­த­வர்­களை இணைக்கும் அங்­கத்­துவ இணைப்பு திட்­டத்­திலும் தொகுதி அமைப்­பா­ளர்­க­ளிடம் பெறும் குறை­பா­டுகள் நில­வு­கின்­றன. இவ்­வா­றான குறை­பாடு இருக்­கையில் எப்­படி தேர்­த­லுக்கு முகங்­கொ­டுக்க முடியும்?  

ஆகவே இம்­மாதம் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை முன்­னிட்டு வேட்­பா­ளர்­களை இணைப்­ப­தற்கு விண்­ணப்பம் கோரப்­படும். அதன்­ பின்னர் நாம் துரி­த­மாக கட்சி மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும்.  இதன்­ பி­ர­காரம் செப்டெம்பர் மாதம் 30ஆம் திக­திக்குள் கிராம மட்­டத்தில் உள்ள கிளை சங்­கங்கள் உடன் நிறு­வப்­பட வேண்டும். 

அதே­போன்று ஒக்­டோபர் 31 ஆம் திக­திக்கு முன்னர் தொகு­தி­ வா­ரி­யான செயற்­றிட்­டங்கள் அனைத்தும் பூர்த்தி செய்­யப்­பட வேண்டும். அத்­துடன் கட்­சிக்கு அங்­கத்­த­வர்­களை  இணைக்கும் பணிகள் உள்­ளிட்ட தேர்­த­லுக்கு தயா­ராகும் நட­வ­டிக்­கைகள் அனைத்தும் ஒக்­டோபர் மாதம் நடுப்­ப­கு­திக்குள் நிறைவு செய்ய வேண்டும். 

ஏனெனில் டிசம்பர் மாத­ம­ளவில் தேர்தல் நடை­பெறும். இந்த உள்­ளூ­ராட்சி தேர்தல் எமக்கு மிகவும் முக்­கி­ய­மாகும். இந்த தேர்­தலில் வெற்றி பெற்றால் மாத்­தி­ரமே தேசிய அர­சாங்­கத்தை அடுத்த இரண்­டரை வரு­டத்­திற்கு வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும். எமது கைகளிலேயே தேசிய அரசாங்கத்தின் பயணம் உள்ளது. எனினும் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகும் 

அத்துடன் கட்சி மறுசீரமைப்பு செயற்பாடு­களுக்கு ஒரு மாத காலஅவகாசம் தருகின்றோம். அதற்குள் பிரச்சினைகளைத் தீர்க்க­வில்லை என்றால் சிறிகொத்தா தலைமை யக உயர்பீடம் தொகுதி நடவடிக்கை பொறுப்பேற்கும் நிலைமை ஏற்படும் என்றார்.

No comments

Powered by Blogger.