August 17, 2017

எந்த‌ முக‌த்துட‌ன், இவ‌ர்க‌ளை க‌ண்டிக்க‌ப்போகிறார்க‌ள்..?

ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு விகாராதிப‌தியின் செய‌ல் வ‌ர‌வேற்புக்குரிய‌து என‌ த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பின் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் கூறியிருப்ப‌தை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிற‌து.

மீராவோடை பாட‌சாலையொன்றின் காணி ச‌ம்ப‌ந்த‌மான‌ பிர‌ச்சினைக‌ளை பொலிஸ் ம‌ற்றும் நீதிம‌ன்ற‌த்தின் ஊடாக‌ தீர்த்துக்கொள்ள‌ முடியும் என்ப‌தே ய‌தார்த்த‌மாகும். இத‌னை விடுத்து ஆடு ந‌னைகின்ற‌து என‌ அழும் ஓநாயின் செய‌லை வியாழேந்திர‌ன் எம். பி வ‌ர‌வேற்றுள்ள‌மை பௌத்த‌ ச‌ம‌ய‌த்த‌லைவ‌ர்க‌ள் ச‌ட்ட‌த்தை கையில் எடுத்து செய‌ற்ப‌ட‌ முடியும் என்ற‌ அங்கீகார‌த்தை அளித்த‌து போன்ற‌தாகும்.

த‌மிழ் ம‌க்க்ளும் முஸ்லிம்க‌ளும் ஒற்றுமையாக‌ வாழும் இக்கால‌ சூழ்நிலையில் ஆங்காங்கு இட‌ம் பெறும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளுக்காக‌ த‌மிழ் ம‌க்க‌ள் மீது பாச‌த்தை காட்டுவ‌து போன்றும் அவ‌ர்க‌ளுக்காக‌ க‌ள‌த்தில் குதிப்ப‌து போன்றும் சில‌ பௌத்த‌ ச‌ம‌ய‌த்த‌லைவ‌ர்க‌ளின் செய‌ற்பாட்டின் சூட்சும‌த்தை கிழ‌க்கு த‌மிழ‌ர்க‌ள் புரிந்து கொள்ள‌வில்லை என்றால் அவ‌ர்க‌ளைப்போன்ற‌ ம‌டைய‌ர்க‌ள் இருக்க‌ முடியாது. 

இவ்வாறான‌ ச‌ட்ட‌த்தை மீறிய‌ செய‌ற்பாடுக‌ளை த‌மிழ‌ர்க‌ள் வ‌ர‌வேற்றால் நாளை த‌மிழ் ப‌குதிக‌ளுக்குள் சிலை ம‌ற்றும் அத்துமீற‌ல் போன்ற‌வ‌ற்றை இவ‌ர்க‌ளே கொண்டு வ‌ந்தால் எந்த‌ முக‌த்துட‌ன் இவ‌ர்க‌ளை க‌ண்டிக்க‌ப்போகிறார்க‌ள்?

ச‌ட்ட‌த்தை நாட்டின் எந்த‌வொரு த‌னிந‌ப‌ரும் கையில் எடுப்ப‌தை உல‌மா க‌ட்சி அனும‌திக்காது.  இவ்வாறுதான் ம‌ஹிந்த‌ கால‌த்திலும் சில‌ர் ச‌ட்ட‌த்தை கையில் எடுத்துக்கொண்டு செய‌ற்ப‌ட்ட‌ன‌ர். அத‌னைக்க‌ண்டித்து ஆட்சியை மாற்ற‌ துணை‌ போன‌வ‌ர்க‌ள் இன்று முஸ்லிம்க‌ளையும் த‌மிழ‌ர்க‌ளையும் சீண்டி விடுவ‌த‌ற்காக‌ ச‌ட்ட‌த்தை கையில் எடுப்போரை பாராட்டுவ‌து ந‌ல்ல‌ செய‌லாக‌ தெரிய‌வில்லை.

இதே சும‌ண‌ தேர‌ர் த‌மிழ் கிராம‌ உத்தியோக‌த்த‌ர்  ஒருவ‌ரை ப‌ற‌த்த‌மிழா, நாய் என்றெல்லாம் பேசிய‌ போது எந்த‌வொரு முஸ்லிம் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ரும் இச்செய‌லுக்காக‌ அவ‌ரை பாராட்ட‌வில்லை. த‌மிழ் ப‌ட‌ங்க‌ர‌வாதிக‌ளால் த‌ம‌து  உற‌வுகளை இழ‌ந்த‌ சாதார‌ண‌ முஸ்லிம்க‌ளும் இத‌னை பாராட்ட‌வுமில்லை வ‌ர‌வேற்க‌வுமில்லை.

அத்துட‌ன் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பிலும் க‌ல்முனையிலும் தேர‌ர்க‌ள் சில‌ர், த‌மிழ‌ர், முஸ்லிம் பிர‌ச்சினைக‌ளில் த‌மிழ‌ர் சார்பில் த‌லையிடுகிறார்க‌ள் என்றால் இது வெறும‌னே அவ‌ர்க‌ளின் சுய‌விருப்ப‌த்தில் ந‌டைபெறுவ‌தாக‌ எவ‌ராவ‌து நினைத்தால் அவ‌ர் சிங்க‌ள‌ இன‌வாத‌த்தின் த‌ந்திர‌ங்க‌ளை அறியாத‌வ‌ர் என்றே அர்த்த‌ம்.

நாட்டில் ச‌மாதான‌த்தையும், ச‌க‌ல‌ இன‌ங்க‌ளையும் நேசிக்கும் ப‌ல‌ ந‌ல்ல‌ பௌத்த‌ தேர‌ர்க‌ள் இருக்கின்ற‌ன‌ர். அதே போல் சிங்க‌ள‌ பேரின‌வாதிக‌ளின் நிக‌ழ்ச்சி நிர‌லை முன்னெடுக்கும் ச‌ம‌ய‌த்த‌லைவ‌ர்க‌ளும் உண்டு.

ஆக‌வே பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் வியாழேந்திர‌ன் சும‌ண‌ தேர‌ரின் ச‌ட்ட‌த்தை கையில் எடுத்த‌ செய‌லை பாராட்டும் க‌ருத்தை உல‌மா க‌ட்சி க‌ண்டிப்ப‌துட‌ன் த‌ன‌து க‌ருத்தை ப‌கிர‌ங்க‌மாக‌ அவ‌ர் வாப‌ஸ் பெற‌ வேண்டும் என‌வும் உலமா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.

11 கருத்துரைகள்:

பாடசாலை காணிகளை கொள்ளை அடியடிக்கும் கள்வர்களை உல்மா கட்சி தலைவர் ஆதரிக்கின்றார். அதனை எதிர்த்து மாணவர்களுக்கு உதவுகிறார் இந்த பௌத்த மத தலைவர்.

இதில் யார் சிறந்தவர்கள்?

Mr Am an Anthony,

Are you hired by Zionists to disturb the peace between the Tamil and Muslim communities?

The Budhist Monk whom you are referring is shedding crocodile tears.

Please consider we all are minority communities and should fight to achieve the common goal without making any divisions among us.

Ajan is working for the money he is receiving

டியர் அண்டனிராஜ்
இந்த விடயத்தில் உங்கள் கருத்தை கண்டிக்கிறேன்.
தயவு செய்து காணி விடயம் தொடர்பான உண்மைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.
ராணுவம் உங்கள் காணிகளை பிடித்தது.
நீங்கள் பயத்தினால் சும்மா இருந்தீர்கள்.
சில இடங்களில் இந்துக்கள் எமது காணிகளை பிடித்தார்கள்.
நாங்களும் பயத்தால் சும்மா இருந்தோம்.
இப்போது நிலமை மாறி விட்டது..
உங்கள் காணிகள் திரும்பக்கிடைப்பது போல் எமது காணிகளையும் திருப்பி தாருங்கள்

@Seeni,
so... do you think "occupying Tamil schools lands by Muslims" would be a good thing and bring peace between both minorities?

Do you guys occupy others lands or destroy forests?

We have been supporting for North East merger and still we are there for it. Now we realise that it is not happening because of people like you.

Post a Comment