Header Ads



பாவங்களிலிருந்து விடுபட, மகிந்த கூறும் ஆலோசனை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாவங்களிலிருந்து விடுபட வேண்டுமானால் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணைந்துகொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று (13) தெரிவித்தார்.

டி.பி. தென்னகோன் நினைவாக தம்புளையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"தற்போது நாடு பெரும் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருகிறது. அநுராதபுரம் மக்கள் தாமரைக் கிழங்குகளை உண்டு வாழும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. நாட்டை இந்த நிலைமைக்கு மாற்றிய பாவத்திலிருந்து மீள்வதற்கு சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

ஆரம்பத்தில் என்னை திருடன் எனச் சொன்னார்கள். இன்று அவர்களுக்குள்ளேயே மாறி மாறி திருடர்கள் எனச் சொல்லிக்கொள்கிறார்கள். அப்படிப்பார்க்கும் போது அவர்கள் அனைவரும் திருடர்கள்தான் என்றார்.

No comments

Powered by Blogger.