Header Ads



பாரிய பொறுப்பு, லத்தீ­பிடம் ஒப்­ப­டைப்­பு


-MFM.Fazeer-

பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை யின் கட்­டளைத் தள­பதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீ­பிடம், திட்­ட­மிட்ட குற்­றங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்­தலை கட்­டுப்­ப­டுத்தும் பாரிய பொறுப்பு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கான அனு­ம­தியை தேசிய பொலிஸ் ஆணைக்­குழு வழங்­கி­யுள்­ள­துடன் அதி­ரடிப் படையின் கட்­டளைத் தள­பதி பத­விக்கு மேல­தி­க­மாக குற்றத் தடுப்பு மற்றும் போதைப் பொருள் கடத்­தலை தடுத்தல் ஆகிய இரு பிர­தான விட­யங்­களின் கீழ்­வரும் நட­வ­டிக்­கைகள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீபின் கீழ் முன்­னெ­டுக்­கப்­ ப­ட­வுள்­ளன.

திட்­ட­மிட்ட குற்­றங்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்த புதிய பொறுப்­புகள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீ­பிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்ள நிலையில், நேற்­று­முதல் அது தொடர்பில் சிறப்பு நட­வ­டிக்­கை­களும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.
அதன்­படி திட்­ட­மிட்ட குற்­றங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் பொது­மக்­க­ளிடம் இருந்து தக­வல்­களைப் பெற்­றுக்­கொள்ளும் 24 மணி­நேர மத்­திய நிலையம் ஒன்று பொலிஸ் விஷேட அதி­ரடிப் படைத் தலை­மை­ய­கத்தில் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த மத்­திய நிலை­யத்­துக்கு தகவல் வழங்­கு­வோ­ருக்கு பரி­சுகள் வழங்­கப்­ப­ட­வுள்­ள­துடன் அவர்­க­ளது அடை­யாளம் இர­க­சி­ய­மாக கருதி பாது­காக்­கப்­படும் என பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

அதன்­படி திட்­ட­மிட்ட குற்­றங்கள், போதைப் பொருள் தடுப்பு தொடர்பில் தக­வல்­களை 011 2580518, 011 - 2058552, 011 2081040 என்­கின்ற குறித்த மத்­திய நிலைய தொலை­பேசி இலக்­கங்கள் ஊடாக வழங்க முடியும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். இத­னை­விட  011 2081044, 011 2588499 என்­கின்ற தொலை­நகல் இலக்­கங்கள் ஊடா­கவும் ctrcolombo@gmail.com,  stfhqopsroom@gmail.com எனும் மின்­னஞ்சல் ஊடா­கவும் தகவல் அளிக்க முடியும் என பொலிஸ் பேச்­சாளர் சுட்­டிக்­காட்­டினார்.

திட்­ட­மிட்ட குற்­றங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் குற்­றங்கள் தொடர்பில் செயற்­படும் சிறப்பு படைப் பிரிவு, பொலிஸ் விஷேட அதி­ரடிப் படையின் கட்­டளைத் தள­ப­தி­யின்கீழ் கொண்டு வரப்­பட்­டுள்­ள­தை­ய­டுத்து அது தொடர்பில் எதிர்­கா­லத்தில் பாரிய முன்­னேற்­றங்­களைக் காணக்கூடி­ய­தாக இருக்கும் என சட்ட வல்­லு­நர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

குறிப்­பாக இது­வரை பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யினர் குற்­ற­வா­ளி­களைக் கைது செய்­யும்­போதும்  அது தொடர்பில்  சட்ட நட­வ­டிக்கை எடுப்­பதில் பல சிக்­கல்கள் ஏற்­பட்­டன. எனினும் தற்­போது திட்­ட­மிட்ட குற்­றங்கள் மற்றும் போதைப் பொருள்  தடுப்புப் பிரிவு ஆகியன  விஷேட அதிரடிப்படை கட்டளைத் தளபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதையடுத்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.