August 29, 2017

இலங்கை கிரிக்­கெட்டில், மாபியாதான் இருக்கின்றது

“ஒரு தேசம் என்று வந்­து­விட்டால் ஜன­நா­யகம் இருக்­க­வேண்டும். ஆனால் இலங்கை  கிரிக்­கெட்டில் ஒரு­நாளும் ஜன­நா­யகம் இருந்­த­தில்லை. கிரிக்­கெட்டில் எப்­போதும் மாபியா ஒன்­றுதான் இருந்­தது.

உலகக் கிண்ண வெற்­றியின் பின்னர் சூதாட்­டக்­கா­ரர்கள் இதற்குள் புகுந்து அனைத்­தையும் நாச­மாக்­கி­விட்­டார்கள். அதன் பின்­னர்தான் எல்­லோரும் பணத்தில் புரள ஆரம்­பித்­தனர்.

அக் காலத்தில் கிரிக்கெட் நிரு­வா­கத்­திற்கு எவரும் வர­மாட்­டார்கள். ஐந்து பேரைக்­கூடத் தேட முடி­யாது. பணத்தைக் கண்­டதும் யார் யாரெல்­லாமோ புகுந்­து­விட்­டார்கள். இப்­போது இருப்­ப­வர்கள் அப்­ப­டிப்­பட்­ட­வர்­கள்தான் என பெற்­றோ­லிய அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க தற்­போ­தைய கிரிக்கெட் நிலை குறித்த கவலை வெளி­யிட்டுள்ளார்.

பெற்­றோ­லிய அமைச்சில் நடை­பெற்ற ஊடக சந்­திப்பில் பேசி­ய­போதே உலகக் கிண்ண வெற்றி அணித் தலை­வரும் அமைச்­ச­ரு­மான அர்­ஜுன ரண­துங்க இதனைக் குறிப்­பிட்டார்.

தற்­போ­தைய கிரிக்கெட் நிலைமை குறித்து ஜனா­தி­ப­திக்கு தெளி­வு­ப­டுத்தி அதற்கு உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரி கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கடிதம் ஒன்றைக் கைய­ளித்­துள்­ள­தாகக் குறிப்­பிட்ட அவர், அதன் பிர­தியை பிர­த­ம­ருக்கும் கைய­ளித்­துள்­ள­தா­கவும் அத்­துடன் இந்தக் கடி­தத்தின் பிர­தியை சகல ஊட­கங்­க­ளுக்கும் வழங்­குவேன் எனவும் அவர்கள் இரு­வ­ரி­டமும் கூறி­ய­தா­கவும் தெரி­வித்தார்.

‘‘நாங்கள் அர­சாங்கம் அமைத்த பின்னர் கிரிக்கெட் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளமை குறித்து நான் ஒன்­றுமே பேசாமல் இருக்­கின்றேன் என என்­மீது குறை ­கூ­று­வார்கள். அதனால் தான் இந்தக் கடி­தத்தை சமர்ப்­பித்­துள்ளேன். நான் சொல்லும் விட­யங்­க­ளுக்கு செவி­ம­டுக்­க­ வேண்­டி­ய­வர்கள் மௌன­மாக இருப்­ப­தா­லேயே கடை­சி­யாக ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகிய இரு­வ­ருக்கும் அறி­விக்­க ­வேண்டும் என்ற எனது கட­மையின் அடிப்­ப­டையில் இந்த கடி­தத்தை நான் ஒப்­ப­டைத்தேன்’’ என்றார்.

‘‘தற்­போது நிரு­வா­கி­க­ளாக இருப்­ப­வர்கள் தகு­தி­யற்­ற­வர்கள் என்­பதை நிரு­வா­கிகள் தெரி­வுக்­கான தேர்­தலில் போட்­டி­யிட முன்­வந்­த­போது விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ரிடம் தெளி­வாக எடுத்­துக்­கூ­றினோம். நானும் சாட்­சி­யா­ள­ராக சென்று எல்­லா­வி­ட­யங்­க­ளையும் தெட்­டத்­தெ­ளி­வாக எடுத்­துக்­கூ­றினேன்.

அத்­துடன் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே அமைச்­ச­ராக இருந்­த­கா­லத்தில் சட்ட நிபுணர் ஒருவர் தயா­ரித்த அறிக்­கை­யையும் கைய­ளித்தோம். எனவே, விளை­யாட்­டுத்­துறை சட்­டத்தின் பிர­காரம் குறிப்­பிட்ட நிரு­வா­கிகள் போட்­டி­யி­டு­வ­தற்கு தகு­தி­யற்­ற­வர்கள் என்­பதை தெளி­வு­ப­டுத்­தினோம். அதற்­க­மைய முது­கெ­லும்­புடன் நேர்­மை­யாக செயற்­ப­டக்­கூ­டிய தைரியம் இருக்­க­வேண்டும்’’ என அவர் சுட்­டிக்­காட்­டினார்.

‘‘முன்னர் கிரிக்கெட் விளை­யாட்டு மோச­மான நிலைக்கு சென்­ற­போது அப்­போது விளை­யாட்­டுத்­துறை அமைச்­சர்­க­ளாக இருந்த எஸ். பி. திசா­நா­யக்க, ல­க் ஷமன் கிரி­யெல்ல, ஜீவன் குமா­ர­துங்க ஆகிய மூவரும் சும­தி­பா­லவை நீக்­கி­விட்டு இடைக்­கால நிரு­வா­கத்தை ஏற்­ப­டுத்­தினர். நாங்கள் கடந்த தேர்­த­லின்­போது தகுதி இன்­மைக்­கான மூன்று கார­ணங்­களை எடுத்­துக்­கூ­றினோம்.

சட்ட நூலிலும் இது இருக்­கின்­றது. சூதாட்­டத்தில் நேர­டி­யா­கவோ மறை­மு­க­மா­கவோ தொடர்­பு­பட்­ட­வர்கள், விளை­யாட்­டுத்­துறை உப­க­ர­ணங்­களைத் தரு­விப்­ப­வர்கள் அல்­லது விற்­பனை செய்­ப­வர்கள், ஊட­கத்­து­றையில் இருப்­ப­வர்கள் ஆகியோர் கிரிக்கெட் நிரு­வாக உத்­தி­யோ­கத்தர் பத­வி­க­ளுக்கு போட்­டி­யிட முடி­யாது என அந்த சட்­ட­நூலில் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. 

இவற்றை புதிய அமைச்சர் நீக்­கி­விட்­டாரோ தெரி­ய­வில்லை. இவை அனைத்தும் சட்­டத்­தை மீறு­ப­வ­னவா என்­பதை ஊட­கங்கள் அறியும். இது குறித்து ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்தேன். அதன் பின்னர் மனித உரி­மைகள் ஆணைக்­குழு முன்­னி­லை­யிலும் விசா­ர­ணைக்கு சென்றோம்.

இன்­று­வரை அறிக்கை இல்லை. அதற்­காக நான் அமைச்­ச­ராக இருந்­து­கொண்டு யாரையும் வற்­புறுத்த முடி­யாது. நான் எனது கட­மை­களை செய்­து­விட்டு ஒதுங்­கி­யி­ருந்து பார்த்­துக்­கொண்­டி­ருக்­கின்றேன். இவ்­வா­றான விட­யங்கள் தொட­ரக்­கூ­டாது என்­ப­தா­லேயே நாட்டின் முதல் மனி­தர்கள் இரு­வ­ருக்கும் இந்த விட­யங்­களை எழுத்து மூலம் அறி­விக்க நிர்ப்­பந்­திக்­கப்­பட்டேன்’’ எனவும் அர்­ஜுன கூறினார்.

‘‘ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கோ பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வுக்கோ அதற்கும் அப்பால் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்க்ஷவுக்கோ கிரிக்கெட் தேர்­தலில் போட்­டி­யிட்டு வெல்­ல ­மு­டி­யாது. ஆனால் சும­தி­பால எந்­நாளும் வெற்­றி­ பெ­று­பவர். அதுதான் கிரிக்கெட் மாபியா என்­பது. இதனை விளை­யாட்­டுத்­துறை அமைச்­சரால் புரிந்­து­கொள்­ள­மு­டி­யா­விட்டால், ஏதோ பிரச்­சினை இருக்­கின்­றது. இது குறித்து நாட்டு மக்கள் எப்­போ­தா­வது தகுந்த பதி­ல­ளிப்பர். எனவே இப்­போ­துள்ள சூழ்­நி­லையில் இடைக்­கால நிரு­வாக சபையை அமைப்­பதே உசி­த­மா­னது. அதுவும் சரி­யா­ன­வர்­க­ளிடம் இந்த நிரு­வாகம் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வேண்டும்’’ என அர்­ஜுன தெரி­வித்தார்.

இலங்­கையில் இடைக்­கால கிரிக்கெட் நிரு­வாக சபை நிய­மிக்­கப்­பட்டால் ஐ.சி.சியின் நெருக்­க­டிக்கு ஆளாக நேரிடும் என விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் கூறு­கின்றார். ஆனால் இந்­தி­யாவில் நீதி­மன்­றத்­தினால் நிய­மிக்­கப்­பட்ட இடைக்­கால கிரிக்கெட் நிரு­வாக சபை இயங்­கு­கின்­றது. அப்­படி இருக்கும் போது இங்கு இடைக்­கால கிரிக்கெட் சபையை நிய­மிக்க முடி­யாதா என மெட்ரோ ஸ்போர்ட்ஸ் வின­வி­ய­தற்கு, ‘‘இடைக்­கால நிரு­வாக சபையை நிய­மிக்­கா­விட்டால் கிரிக்கெட் இன்னும் மோச­ம­டைந்­து­விடும். சரி­யா­ன­வர்­களை நிய­மித்து இதனை நடத்­த­வேண்டும். விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் சாக்­குப்­போக்­குக்­காக அப்­படி கூறு­கின்றார். எமது நாட்டில் 8 வரு­டங்கள் இடைக்­கால நிரு­வாக சபை இருந்­தது. 

நானும் 10 மாதங்கள் இடைக்­கால நிரு­வாக சபையில் இருந்தேன். தேர்தல் நடத்­து­மாறு எங்­க­ளிடம் ஐ.சி.சி. கோரி­யது. தேர்தல் நடத்­தினால் சூதாட்­டக்­கா­ரர்கள் வந்­து வி­டு­வார்கள் என தெளி­வு­ப­டுத்­தி­ய­போது அவர்கள் சிரித்து விட்டு இடைக்­கால சபையை செயற்­பட அனு­ம­தித்­தனர். ஊடகப் பேச்­சா­ள­ரானால் பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்து விடு­ப­டு­வது இல­கு­வா­னது.

அவர் நியா­ய­மாக பேச வேண்டும். அல்­லது இப்­படி ஒரு பிரச்­சினை இருக்­கின்­றது என ஐ.சி.சியிடம் சென்று கலந்­து­ரை­யா­ட­வேண்டும். ஆனால் எஸ். பி. திசா­நா­யக்க, ல­க் ஷமன் கிரி­யெல்ல, ஜீவன் குமா­ர­துங்க ஆகிய மூன்று அமைச்­சர்­களும் ஐ.சி.சியிடம் செல்­ல­வில்லை. இந்த மூவ­ருமே தகு­தி­யில்­லா­த­வர்­களை நீக்­கி­னார்கள். அதன் பின்னர் இடைக்­கால நிரு­வாக சபை நிய­மிக்­கப்­பட்டு வரு­டக்­க­ணக்­காக இயங்­கி­யது. சிலர் தகு­தி­யற்ற தங்­க­ளது நண்­பர்­களைக் காப்­பாற்ற முயற்­சிப்­ப­துதான் உண்மை. அது தான் கசக்கும் உண்மை. 

அர­சாங்­கத்தில் அங்கம் வகித்த இரண்டு அமைச்­சர்­களில் ஒருவர் இரா­ஜி­னாமா செய்­த­துடன் இன்­னு­மொ­ரு­வரை ஜனா­தி­பதி நீக்கினார். அப்படி இருக்கும்போது கிரிக்கெட் நிருவாகத்தையும் அவரால் கலைக்க முடியுமல்லவா என மெட்ரோ ஸ்போர்ட்ஸ் மீண்டும் வினவியபோது, ‘‘பொறுத்திருப்போம். இப்போதுதானே நாங்கள் கடிதம் சமர்ப்பித்துள்ளோம். நான் ஒரு விடயத்தை சொல்வதானால் என்னைத் தவறாக கருதவேண்டாம்.

ஒருகாலத்தில் சமயத்தை விட கிரிக்கெட் பெரிதாக இருந்தது. கிரிக்கெட்தான் சகல இனத்தையும் ஒரு குடையின்கீழ் கொண்டு வரக்கூடியதாக இருந்தது. 1996 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நாங்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது எல்.ரீ.ரீ.ஈ.யும் யுத்தத்தை நிறுத்தியது என்பதை என்னால் நினைவுகூரமுடியும். இப்போது கிரிக்கெட் தலை கீழாகியிருப்பதுற்கு தவறான நிருவாகமே காரணம். இவற்றைத் திருத்த வேண்டும்” என அமைச்சர் அர்ஜுன தெரிவித்தார்.

1 கருத்துரைகள்:

100%உண்மை.. பழைய நிலைக்கு இலங்கை கிரிக்கெட் அணி திரும்ப வேண்டும்...

Post a Comment