Header Ads



மறிச்­சுக்­கட்டி கைந­ழுவும் அபா­யம், விழிப்­பு­ணர்வு தேவை என்­கிறார் ஹக்கீம்

மறிச்­சுக்­கட்டி பிர­தேசம் கைந­ழு­விப்­போகும் அபாயம் எழுந்­துள்­ளது, பாதிக்­கப்­பட்ட அப்­பி­ர­தே­சத்து மக்கள் விழிப்­பு­ணர்­வுடன் செயற்­ப­ட­வேண்டும்  என நகர திட்­ட­மிடல் மற்றும் நீர்­வ­ழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

எனவே மறிச்­சுக்­கட்டி,பாலைக்­குழி, கொண்­டச்சி,கர­டிக்­குழி ஆகிய பிர­தே­சங்­களில் தமது பூர்­வீக நிலத்தை இழந்து வாழ்­கின்­ற­வர்கள் தமது முறைப்­பா­டு­களை விரைவில் இது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள ஜனா­தி­பதி ­கு­ழு­விற்கு சமர்ப்­பி­க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

மன்னார் முசலி பிர­தே­சத்­தி­லுள்ள ஹுனைஸ் நகரில் அமைந்­துள்ள ஹுனைஸ் பாரூக் அர­சினர் முஸ்லிம் கலவன் பாட­சா­லையில் அமைக்­கப்­பட்ட கேட்போர் கூடத்­துடன் வகுப்­பறை கட்­டிடத் தொகு­திகள்  நகர திட்­ட­மிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்­சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் தலை­வ­ரு­மான ரவூப் ஹக்­கீ­மினால் திறந்து வைக்­கப்­பட்­டது .இதன் போது உரை­நி­கழ்த்­து­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்­து­கையில்,

கடந்த யுத்­த­கா­லத்தில் இடம்­பெ­யர்ந்த இந்­தப்­பி­ர­தே­சத்து மக்­களின் காணி­களை அரச வர்த்­த­மானி அறி­வித்­த­லின்­படி வில்­பத்து வனத்­திற்கு சொந்­த­மான பிர­தே­ச­மாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. இந்­த­வி­ட­யத்தில் அப்­பி­ர­தே­ பூர்­வீக குடி­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டி­ருப்­பது தொடர்பில் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­த­தற்­கி­ணங்க ஜனா­தி­ப­தியின் ஆலோ­ச­னைக்­கி­ணங்க அவ­ரது செய­லா­ள­ரினால் அனுப்பி வைக்­கப்­பட்ட உய­ர­தி­கா­ரி­க­ளு­ட­னான சந்­திப்பும் முசலி பிர­தேச சபை கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது. 

அதன்­ பிற்­பாடு ஜனா­தி­ப­தியின் சுயா­தீன குழு இந்­தப்­பி­ர­தே­சத்­திற்கு  விஜ­யம்­மேற்­கொண்டு இப்­பி­ர­தே­ச மக்­களின் உண்­மை­யான நிைல­வ­ரத்தை கேட்­ட­றியும் நட­வ­டிக்­கை­களும், எல்­லை­களை மீண்டும் இனங்­கண்டு உறு­திப்­ப­டுத்தும்  நட­வ­டிக்­கைளை அண்­மையில் மேற்­கொண்­ட­தாக அறி­யக்­கி­டைத்­தது. இதன்­போது இந்­தப்­பி­ர­தே­ச மக்கள் இந்­த­வி­டயம் தொடர்பில் அதி­கா­ரி­க­ளுக்கு சரி­யான தக­வல்­களை வழங்­கத்­த­வ­றி­விட்­ட­தா­கவும் தக­வல்கள் கிடைத்­துள்­ளன. 

எனவே, மறிச்­சுக்­கட்டி,பாலைக்­குழி, கொண்­டச்சி,கர­டிக்­குழி ஆகிய பிர­தே­சங்­களில் தமது பூர்­வீக நிலத்தை இழந்து வாழ்­கின்­ற­வர்கள் தமது முறைப்­பா­டு­களை விரைவில் ஜனா­தி­பதி கு­ழு­விற்கு சமர்ப்­பி­யுங்கள். இந்த விட­யத்தில் இந்தப்   பிர­தே­ச  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் செயற்­பாட்­டா­ளர்கள் கரி­ச­னை­யுடன் செயற்­ப­டு­மாறும், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­யினை பெற்­றுக்­கொ­டுப்­பதில் முன்­னிற்­கு­மாறும் கேட்­டுக்­கொள்­கிறேன். 

இன்­னு­மொரு விடயம் இந்­தப்­பி­ர­தே­சத்தில் அநீ­தி­யாக இடம்­பெற்­றுள்­ளது. அதா­வது, எல்­லை­மீள்­நிர்­ணயம் தொடர்பில் முசலி பிர­தேசம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. எமது விகிதாசா­ரத்­திற்கு ஏற்ப பிர­தேச சபை உறுப்­பி­னர்­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கு புதிய எல்­லைப்­பி­ரிப்­பா­னது தடை­யாக அமைந்­துள்­ளது. இது தொடர்பில் எமது ஆட்­சே­ப­னை­களை நாம் மிகத்­தெ­ளி­வாக முன்­வைத்தும் மீண்டும் அதே தவறு எல்­லைப்­பி­ரிப்பில் இடம்­பெற்­றுள்­ளது என்­பது அங்­கீ­க­ரிக்க முடி­யாத ஒரு விட­ய­மாகும்.   

இது ­தொ­டர்பில் பல­ வா­த­வி­வா­தங்­களில் நாம் பங்­கு­பற்­றி­யுள்ளோம். மிகக்­கு­றைந்த அதி­கா­ரத்­தை­யு­டைய சபை­யாக இருந்­தாலும் அதிலும் நாம் பாதிப்­ப­டை­கின்­ற­வர்­க­ளாக, நம்மை ஆக்­கு­கின்ற நிைல­வரம் கேள்­விக்­குட்ப­டுத்­த­வேண்­டி­ய­வையே. எனவே இந்த பிழை­யான எல்லை பிரிப்பு தொடர்பில் மீண்டும் கவனம் செலுத்தி எமக்­கு­ரிய சரி­யான அள­வீ­டு­களை பெற்­றுக்­கொள்­வதில் நாங்கள் அவ­தானம் செலுத்­த­வேண்­டிய தரு­ணத்தில் இருக்­கிறோம் என்றார்.

1 comment:

  1. HAKEEM OPENS MOUTH IN “MUSALI”.
    As the signs for the local government elections are emerging, the HYPOCRITIC and DECEPTIVE Muslim political leaders like SLMC Leader Rauf Hakeem has started to PROWL thickly populated Muslim rural villages in the Mannar district to tell the long stories and mislead the INNOCENT Muslim voters to vote them to power. This deceptive so-called SLMC Leader campaigns under the SLMC Party banner, but contests under the UNP Elephant symbol. Wiping up communal and religious themes, these politicians finally do all they can to become elected by the people hoodwinking the poor "PAMARAMAKKAL", the Muslim voters? Let the Muslims (PAMARAMAKKAL) of MANNAR DISTRICT NOT get duped once again, Insha Allah. Muslims in Sri Lanka do NOT have a voice - a POLITICAL VOICE for that purpose. The SLMC is dead. The ACMC is busy making money, the Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits. The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society and Muslim Media organizations (excluding www.jaffanamuslim.com) in Sri Lanka and their leaders will stage dramas by releasing "press statements" because all of them have been well taken care by the Yahapalana government and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut. Like what happened in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, they all will COVER up the TRUTH and the Muslims will be told a "LONG STORY. WHY HAS NOT THIS unscrupulous UNDEMOCRATICALLY SELF ACCLAIMED SLMC LEADER HAS NOT CALLED FOR A PRESIDENTIAL COMMISSION OR A HIGH LEVEL INQUIRY BY THE YAHAPALAN GOVERNMENT ON THE ALUTHGAMA and BERUWELA VIOLENCES/INCIDENCES UP TO NOW? It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. The Muslims of MARICHIKATTU are most capable of doing it and the YOUTH of MANNAR can lead this cause, Insha Allah. “The Muslim Voice” is sure that they can take this challenge forward, Insha Allah and close the doors for the DEAD SLMC, The UNP and the ACMC not to enter MARICHIKATTU or the district with deceptions, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, Former SLFP District Organizer - Trincomalee District and Convener - The Muslim Voice.

    ReplyDelete

Powered by Blogger.