Header Ads



வடகொரியாவுக்கு எதிரான அறிக்கை, அதிகாரிகளே வெளியிட்டனர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி வடகொரியாவுக்கு எதிராக வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளால் அறிக்கை வெளியிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த ஜுலை மாதம் 29ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியினால் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதற்கு முன்னர் ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி பென் எமர்சனுக்கு, சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களை சந்திப்பதற்கும் வெளிவிவகார அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக வெளிவிவகார செயலாளராக எசல வீரகோன் சுற்றுலா அமைச்சிற்கு அனுப்பப்பட்டு பிரசாத் காரியவசம் புதிய வெளிவிவகார செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடகொரியாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டமை குறித்து தான் அறிந்திருக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. குற்றம் செய்தவனை வேலையைவிட்டு தூக்காமல் அவனுக்கு வேறு திணைக்களத்தில் வேலை கொடுக்கிறார்கள் அப்ப எப்படி இந்த நாடு உருப்படும்

    ReplyDelete

Powered by Blogger.