Header Ads



மார்க்கப் பணிக்கு, ஊதியம் பெறலாமா?

தற்காலத்தில் மார்க்கக் கல்வியை கற்றுக் கொடுப்பதும், அதற்கென தனியான கல்வி நிலையங்களை அமைத்து நடாத்தி வருவதும,; பரவலாக காணப்படுகின்றன. இவ்வாறு மார்;க்கக் கல்வியை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பில் இரண்டு பிரதானமான கருத்துக்கள் நிலவுவதைக் காணலாம்.
1. மார்க்கக் கல்வியை கற்பிப்பதற்கு ஊதியம் பெறுவது கூடாது. 2. மார்க்கக் கல்வியை கற்பிப்பதற்கு ஊதியம் பெறலாம்.
இந்த இருசாராரும் தஙக்ளது கருத்துக்களுக்கு சாதகமான ஆதாரங்களை முன்வைக்கின்றனர். அதனடிப்படையில் ஊதியம் வாங்குவது கூடாது என்ற கருத்தை கூறுபவர்கள் பின்வரும் சில ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.
'அல்குரஆ;னைஓதுங்கள்,அதன்மூலம்சாப்பிடாதீர்கள்,அதன்மூலம் அதிகப்படுத்த விரும்பாதீர்கள், அதனை புறக்கணிக்காதீர்கள், அதிலே வரம்பு மறீhதீர்கள்.'(அஹ்மத்14986)
அதேபோல்'யார்அல்குரஆ;னைஓதுகிறாரோஅவர்அதன்மூலம் அல்லாஹ்விடமேகேட்கட்டும்.சிலகூட்டத்தினர்வருவாரக்ள்அவரக்ள்குரஆ;னை ஓதுவார்கள்,அதன்மூலம்மனிதர்களிடமேகேட்பாரக்ள்.'(திர்மிதி2841,அஹ்மத் 19039)
ஆகியஹதீஸக்ளைமுன்வைக்கின்றனர்.உண்மையில்மேற்குறிப்பிட்டஇரண்டு ஹதீஸக்ளும்கூறும்யதாரத்;தம்என்னவெனில்குரஆ;னைஓதிவிட்டுஅதற்காக உலகப்பலனை எதிர்பாரப்;பதனையே குறிப்பிடுகின்றன.
  
உதாரணமாக:குரஆ;னைஓதிஅதன்மறுமைப்பலனைஇறந்தஒருவருக்கு சேரப்;பதாகக் கூறி அதற்கு கூலியாக பணமோ பொருளோ பெறுவதைக் குறிப்பிடலாம். ஓதியதற்கான கூலியை மறுமையில் அல்லாஹ்விடம் எதிர்பாரக்;காமல்,இன்னொருமனிதனுக்குஅதன்நன்மையைசேரப்;பதாகக்கூறி அதற்குப் பகரமாக சாப்பாடோ, பணமோ பெறுவது மார்க்கம் அங்கீகரிக்காத செயலாகும். இவ்வாறான செயல்களையே இக் ஹதீஸ்கள் தடுக்கின்றன.
ஆனால்குரஆ;னையும்மார்க்கக்கல்வியையும்கற்பிக்கும்ஆசிரியர்களின்நிலை இதிலிருந்து வேறுபட்தாகும்.
மேலும்ஊதியம்வாங்குவதுகூடாதுஎன்றகருத்தைகூறுபவரக்ள்பின்வரும்
அல்குரஆ;ன்வசனங்களையும்ஆதாரமாகவைக்கின்றனர.;'மேலும்என்
வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள். எனக்கே அஞ்சி நடவுங்கள்.' (5 : 44) என்று அல்லாஹ் கூறுகின்றான்.
இவ்வாறான கருத்தில் வரும் வசனங்களையும் சிலர் முன்வைக்கின்றனர.; உண்மையில் இவை எதனை குறிப்பிடுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அல்லாஹ்வின் வேத வசனங்களில் தான் அறிந்ததைச் சொன்னால் தனக்கு கிடைக்கும் உலக இலாபம் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக அதனைச் சொல்லாமல் இருபப்தும்;; மறைப்பதுமே இங்கு கண்டிக்கப்படுகினறது. இதனை பின்வரும் வசனங்களில் தெளிவாக காணலாம்.
'நிச்சயமாக எவர்கள் வேதத்தில் அல்லாஹ் இறக்கியதை மறைத்து, அதற்குப் பகரமாக சொற்பகிரயத்தை வாங்குகின்றார்களோ அத்தகயவர்களின் வயிறுகளில் நெருப்பைத் தவிர(எதையும்) உட்கொள்ளவில்லை. மறுமை நாளில் அல்லாஹ் அவரக்ளுடன்பேசவும்மாட்டான்.அவர்களைத்தூய்மைப்படுத்தவும்மாட்டான். மேலும் அவரக் ளுக்கு நோவினை தரும் வேதனை உண்டு.
அவர்கள் தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்பிற்குப் பதிலாக வேதனையையும்விலைக்குவாங்கிக்கொண்டவரக்ள்.எனவேநரகநெருப்பின்
மதுP இவர்களைப் பொறுமை கொள்ள வைத்தது எது? '(2:174இ175)
அல்லாஹ்வின் வசனங்களை சொற்ப விலைக்கு விற்பதென்பது அவனது வசனத்தை சொல்லாமல் மறைப்பதையும், அதன்மூலம் அடையும் உலக இலாபத்தையுமே குறிக்கின்றது என்பதைப்புரிந்து கொள்ளலாம். மாரக்;கத்தை கற்பிக்கும் ஆசிரியர்கள் அதற்காக ஊதியம் பெறுவதை இந்த வசனங்கள் தடுக்கவில்லை.(அவர்களோ மார்க்கத்தை மறைக்காது அதைக்கற்றுக் கொடுப்பவர்களாயிற்றே!)
மேற்குறிப்பிட்டகுரஆ;ன்வசனங்களும்,ஹதீஸக்ளும்மார்க்கப்பணிக்குஊதியம் வாங்குவது கூடாது எனக் கூறும் தரப்பினரால் முன்வைக்கப்படும் ஆதாரங்களாக
உள்ள அதே வேளை ஊதியம் வாங்குவது ஆகுமானது என்று வாதிடும் தரப்பினரால் பின்வரும் ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன.
'நபித்தோழரக்ள்ஒருபயணத்தில்விஷக்கடிபட்டஒருவரைச்சந்தித்தாரக்ள். அப்போது ஒரு நபித்தோழர் சில ஆடுகளைத்தர வேண்டும் என்ற நிபந்தனையின் பெயரில் சூறா அல் பாத்திஹாவை ஓதி ஊதினார். அம்மனிதரும் விஷத்தில் இருந்து நிவாரணம் அடைந்தார.; இதன் பிறகு ஆடுகளைப் பெற்றுக் கொண்டு
நபித்தோழரக்ள் மதீனா திரும்பினாரக்ள்.' என அப்பாஸ்(ரழி) அவரக்ள் அறிவிக்கின்றார்கள். (புஹாரி : 5737)
இதே கருத்தில் அபூ ஸயதீ ; அல்குத்ரி(ரழி) அவரிகளும் கூறிய செய்தியில் (புஹாரி 5736ல);நபி(ஸல);அவரக்ளும்அந்தஆடுகளில்ஒருபங்கைகேட்டதாக வநது;ள்ளது.
இமாம்திர்மிதி(ரஹ);அவரக்ளும்இதைப்பதிவுசெய்துஅதில்கீழ்வருமாறு எழுதுகிறாரக்ள்.'குர்ஆனைக்கற்றுக்கொடுக்ககூலிபெறுவதுஆசிரியருக்கு
ஆகுமானதாகும். அதற்கு கூலி கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்க அவருக்குஉரிமைஉண்டு.என்றுஇமாம்ஷhபிஈ(ரஹ);அவரக்ள்கூறுகிறார்கள்.
அதற்கு இந்த ஹதீஸை ஆதாரம் காட்டி இருக்கிறார்கள்.' (திர்மிதி 1989) மேலும், வளீன் இப்னு அத்தா(ரஹ்) அறிவிக்கிறார்கள்:
'மதீனாவில் மூன்று ஆசிரியர்கள் சிறுவரக்ளுக்கு கற்பித்து வந்தாரக்ள். அவரக்ள் ஒவ்வொருவருக்கும் மாதா மாதம் 15திர்ஹம்களை வாழ்வாதார(ஊதிய)மாகஉமர்(ரழி)அவரக்ள்வழங்கிக்கொண்டிருந்தாரக்ள்.' (பைஹகீ, முசன்னஃப் இப்னு அபீiஷபா).
இது போன்ற இன்னும் பல ஆதாரங்கள் மார்க்கப் பணிக்கு கூலி வழங்குவதும், வாங்குவதம் ஆகுமானது என்ற கருத்தையே தருகின்றன. மேற்கண்ட விளக்கங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் மார்க்கபபணிக்கு ஊதியம் பெறுதல் ஆகுமானது என்ற முடிவே மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவாக உள்ளது. அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

பின்த் முஹம்மது அப்துர் ரஹ்மான் (ஹூதாயிய்யா), இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகம், ஒலுவில்.

1 comment:

  1. வைத்தியராக குரானை ஓதி வைத்தியம் பார்ப்பதட்கும் ஆசிரியராக கற்றுக்கொடுப்பதட்கும் தொழில் என்ற ரீதியில் கூலி பெறுவதை அங்கீகரிக்கும் மார்க்கம் இபாதத்தாக செய்வதட்கு கூலிவாங்குவதை வன்மையாக கண்டிக்கிறது அதட்கு அல்லாஹ்விடம் கூலிக்கு பதிலாக தண்டனைதான் கிடைக்கும்

    ReplyDelete

Powered by Blogger.