Header Ads



குருநாகல் பள்ளிவாசலில் சிறுநீர், கழித்தும் அட்டூழியம் - குற்றவாளிகளை பிடித்து, தண்டனை வழங்க கோரிக்கை


நாரம்­மல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பெந்­தெ­னி­கொட பிர­தே­சத்­தி­லுள்ள இரு ஜும்ஆப் பள்­ளி­வா­சல்கள் மீது இனம் தெரி­யாத நபர்­களால் நேற்­று­முன்­தினம் நள்­ளி­ரவு 12.00 மணி அளவில் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன.

அத்­துடன், இதன்­போது, ஒரு பள்­ளி­வா­ச­லினுள் சிறுநீர் கழித்தும் அசுத்­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

நாரம்­மல மடிகே பெந்­த­னி­கொட எனும் முஸ்லிம் கிரா­மத்தில் அமைந்­துள்ள உஸ்­வதுல் ஹஸனாத் ஜும்ஆ­பள்­ளியும், மஸ்­ஜி­துத்­தக்வா தைக்­காப்­பள்­ளி­யுமே நேற்று முன்­தினம் இரவு சுமார் 12 மணி­ய­ளவில் தாக்­கு­த­லுக்­குள்­ளா­கி­யுள்­ளன.

பெந்­தெ­னி­கொட உஸ்­வத்துல் ஹஸனாத் ஜும்ஆ பள்­ளி­வா­சலின் முன்­வா­ய­லுக்கு கல்லால் எறிந்­துள்­ள­மையால் அதன் மேலே உள்ள கண்­ணாடி உடைந்­துள்­ளது. அத்­துடன் அதே வாசலில் நின்று சிறு­நீரைக் கழித்து விட்டும் சென்­றுள்­ளனர்.

அக்­கரை ஜும்ஆப் பள்­ளி­வா­சலின் யன்­ன­லுக்கு கல்லால் எறிந்­துள்­ளனர். அதன் கண்­ணா­டிகள் உடைத்து சேத­மாக்­கி­யுள்­ளனர்.

சுபஹ் தொழு­கைக்­காக முஅத்தின் மார்கள் வந்து பார்த்த பின்­னரே இந்த தாக்­குதல் தொடர்­பாக பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கத்­தி­ன­ருக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

இந்த விடயம் தொடர்­பாக இரு பள்­ளி­வா­சல்­க­ளி­னது நிரு­வா­கத்­தி­னரும் நாரம்­மல பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்­ளனர். இத­னை­ய­டுத்து பொலிஸார் உடன் ஸ்தலத்­திற்கு வந்­து­செய்து விசா­ரணை மேற்­கொண்­டுள்­ளனர்.

சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்­பாக பள்­ளி­வாசல் (உஸ்­வ­துல்–ஹஸனாத்) தலைவர் மௌலவி எம்.ஜே.எம்.ஜெஸீம் (பலாஹி) அவர்­களை தொடர்பு கொண்டு கேட்ட போது,

குரு­நாகல் மாவட்­டத்தின் மிகப் பழைமை வாய்ந்த முஸ்லிம் கிரா­மங்­களில் ஒன்­றான எமது மடிகே பெந்­த­னி­கொட கிரா­மத்தில் சுமார் 325 குடும்­பங்கள் வசிக்­கின்­றன. நாம் பெரும்­பான்மை இனத்­த­வர்­களை சூழ வாழ்­வ­துடன் அவர்­க­ளுடன் அந்­நி­யோன்­ய­மா­கவே பழ­கு­கிறோம். எமது பெரிய பள்­ளிக்கு சூழ இருப்­பது முஸ்­லிம்­களே எனினும் மஸ்­ஜி­துத்­தக்வா பள்­ளியின் சூழ முஸ்­லிம்­களும் பெரும்­பான்மை இனத்­த­வர்­களும் வசிக்­கின்­றனர். 

நேற்று இரவு சுமார் 12 மணி­ய­ளவில் பள்­ளி­வாசல் பகு­தியில் இருந்து சிறு சப்தம் அய­ல­வர்­க­ளுக்கு கேட்­டுள்­ளது. எனினும் அதனை எவரும் பொருட்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை. இப்­ப­டி­யொரு தாக்­குதல் எமது பள்­ளிக்கு ஏற்­ப­டு­மென்­று­கூட நாம் எண்­ணி­யி­ருக்­க­வில்லை. 

மிகவும் பழை­மை­யான எமது பள்­ளியில் தொழு­கைக்கும் இட­நெ­ருக்­க­டி­யாக இருந்த சந்­தர்ப்­பத்தில், விரி­வு­ப­டுத்தி இரு மாடி­களைக் கொண்ட பள்­ளி­வா­ச­லாக கட்டி, கடந்த றம­ழா­னுக்­குத்தான் திறப்பு விழா­வையும் வைத்தோம். அந்­நி­லையில் இந்த தாக்­கு­த­லா­னது மிகவும் கவ­லைக்­கு­ரி­ய­தாகும். 

தாக்­கு­த­லினால், முன்­ப­கு­தியின் கண்­ணா­டி­யொன்று நொருங்­கி­யுள்­ள­துடன், தக்வா பள்­ளி­யிலும் கண்­ணா­டி­யொன்று நொருங்­கி­யுள்­ளது அத்­துடன் அங்கு பள்­ளியின் முன் பகு­தியில் சிறு­நீரும் கழித்து சென்­றுள்­ளனர். 

நாரம்­மல பொலிஸ் நிலை­யத்தில் வாக்கு மூலங்­களை பதிவு செய்­துள்ளோம்.

தொடர்ந்தும் பொலிஸார் மற்றும் உயர் அதிகாரிகள் எமது பள்ளிவாசல்களுக்கு வந்தவன்னமேயிருக்கின்றனர். 

எமது  ஒரே வேண்டுகோள் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட வேண்டும். அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கவேண்டும். இனி எமது நாட்டின் எந்தப் பள்ளி வாசல்களுக்கும் இப்படியான அச்சுறுத்தல் இருக்கக்கூடாது என்பதாகும் என தெரிவித்தார். விடிவெள்ளி

No comments

Powered by Blogger.