Header Ads



"எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய சட்டமே உயிரைவிட மேலானது"


-மு.மு.மீ-

இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் என உலகின் அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் விவாகரத்து செய்கிறார்கள்.

இவற்றில் இஸ்லாத்தில் மட்டும் விவாகரத்து முடிந்த பிறகும் கணவன் - மனைவி இருவரும் இணைந்து வாழ விரும்பினால் இரண்டாவது முறையாக திருமணம் செய்து இணைந்து வாழ முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய சட்டம் சலுகை வழங்குகிறது.

மற்ற மதங்களை சேர்ந்தவர்கள் விவாகரத்து செய்து விட்டால் ஒரேடியாக பிரிந்து சென்று விடுகிறார்கள்.

ஆனால் முஸ்லிம்களுக்கு விவாகரத்து ஆகி பிரிந்த நிலையிலும் இரண்டாவது முறையாக இணைந்து வாழ இஸ்லாம் அனுமதி அளிக்கிறது.

அவ்வாறு இரண்டாவது முறையாக இணைந்து வாழும்போது இரண்டாவது முறையும் பிரிய நினைத்தால் இரண்டாவது முறையாக மீண்டும் விவாகரத்து செய்யலாம்.

அவ்வாறு பிரிந்த பிறகு மீண்டும் இணைய விரும்பினால் மூன்றாவது முறையாக திருமணம் செய்து இணைந்து வாழ இஸ்லாம் அனுமதி அளிக்கிறது.

அவ்வாறு இணைந்து வாழும்போது மீண்டும் பிரிய நினைத்தால் மூன்றாவது முறையாக விவாகரத்து செய்யலாம்.

இவ்வாறு மூன்று முறை விவாகரத்து செய்ய இஸ்லாமிய மார்க்கம் அனுமதி அளித்துள்ளது.

இந்த சட்டம் உலகத்தில் எந்த மதமும் வழங்காத பெண்களின் வாழ்வாதார சூழலை கருத்தில் கொண்டு இஸ்லாம் மட்டுமே இந்த சிறப்பு சட்டத்தை வழங்குகிறது.

இந்த நிலையில் மார்க்கம் அறியாத சிலர் மனைவி மீது கொண்ட கோபத்தில் தலாக், தலாக், தலாக் என்று ஒரே நேரத்தில் மூன்று முறை கூறி மூன்று வாய்ப்பையும் இதோடு முடிக்கிறேன், இனி நீ எனக்கு தேவையில்லை என்று சிலர் அறியாமையில் கூறுகிறார்கள்.

ஒரு முறை சொல்கிறானோ, மூன்று முறை சொல்கிறானோ, முப்பது முறை சொல்கிறானோ பிடிக்காத மனைவியை விவாகரத்து செய்ய கணவனுக்கு உரிமை உள்ளது.

இதில் மற்ற மதங்களை சேர்ந்தவர்களோ அல்லது அரசாங்கமோ தலையிட என்ன உரிமை இருக்கிறது ?

யாருக்கும் உரிமையே இல்லாத விசயத்தில் அத்துமீறி மற்றவர்கள் உள்ளே நுழைகிறார்கள்.

அதேசமயம் ஒரே நேரத்தில் ஒரு முறையோ, மூன்று முறையோ, முப்பது முறையோ, முன்னூறு முறையோ எத்தனை முறை தலாக் சொன்னாலும் அது இஸ்லாத்தின் சட்டப்படி ஒரே தலாக் தான், மீண்டும் இரண்டு முறை இணைந்து வாழலாம்.

அதேப்போல் பெண்களும் கணவனை விவாகரத்து செய்ய விரும்பினால் பெண்களும் கணவனை விவாகரத்து செய்ய இஸ்லாம் முழு அனுமதி அளித்துள்ளது.

இப்பேற்பட்ட சிறப்பு அம்சம் கொண்ட இஸ்லாமிய குடும்பவியல் சட்டத்தை பாஜக அரசு சீர்குலைக்க முயற்சிக்கிறது.

பாஜக அரசின் கயமைத்தனத்தை கண்டித்தும், இஸ்லாமிய ஷரிஅத் சட்டமே தங்களுக்கு தேவை என்று திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பிரம்மாண்டமான பேரணியும், மாநாடும் நடைபெற்றது.

மாநாட்டில் லட்சக்கணக்கான முஸ்லிம் பெண்கள் திரண்டு தங்களுக்கு இஸ்லாமிய சட்டமே தேவை என்று பிரகடனம் செய்தார்கள்.

பாஜகவை சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வியின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் இஸ்லாமிய சட்டம் தேவையில்லை என்று கூறினால் அதை ஒளிபரப்பி இஸ்லாமிய மார்க்கம் பெண்களின் உரிமையை பறிப்பதாக படம் காட்டும் ஊடகங்கள், தமிழகத்தில் லட்சக்கணக்கான முஸ்லிம் பெண்களும், இந்தியாவில் கோடிக்கணக்கான முஸ்லிம் பெண்களும் திரண்டு இஸ்லாமிய சட்டமே தங்களுக்கு பாதுகாப்பானது என்று பிரகடனம் செய்ததை ஊடகங்கள் லாவகமாக மூடி மறைக்கின்றனர்.

எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய சட்டமே உயிரை விட மேலானது.

3 comments:

  1. Indian Muslims must get autonomy from the notorious hindu leader Modi.This so-called prime minister of India is a notorious criminal and he must be arrested for an independent judicial inquiry by the ICC (international criminal court).
    Autonomy is of paramount importance for Muslims in India.

    ReplyDelete
  2. " முத்தலாக்" என்றால் என்ன என்று கூட தெரியாத கணவன்மார்களால் முத்தலாக்கின் விதிமுறைகளை அறியாத போலி முஸ்லிம்களைக் கொண்டு மார்க்கமே தெரியாத அப்பாவி முஸ்லிம் பெண்களுக்குக் கொடுக்கப்படும் விவாகரத்தின் பிரதிபலிப்பே இன்றைய இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு. (நீங்கள் புகழுங்கள் அல்லது இகழுங்கள், உங்களின் இந்தத் தீர்ப்பால் அல்லாஹ்வின் மகத்துவத்தில் இருந்து ஒரு அனுவளவும் குறையப் போவதில்லை, ஆனால் எங்களின் கவலையெல்லாம் உங்களுக்கும் இந்த தீன் கிடைக்க வேண்டும் நீங்களும் சுவர்க்கம் போக வேண்டும் என்பது மட்டுமே)

    ReplyDelete
  3. My dear Ifaz, Please note the fact that Mr. Modi is in the good book of USA and Israel and your bringing or complaining him to ICC or any other Human Right organisation is an impossible task. Let us Better not stir up a hornet nest.

    ReplyDelete

Powered by Blogger.