August 30, 2017

புத்தளம் தந்த அஸ்வர்

 - புத்தளத்தில் இருந்து தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா -

நீங்கள் மண்ணறை வாழ்க்கைக்கு முந்தி விட்டீர்கள்,

இன்ஷா அல்லாஹ் நாங்களும் அந்த வாழ்க்கைக்கு வரவேண்டியுள்ளது. அல்லாஹ்வின் நியமம் நிச்சயமாக ஒவ்வொரு ஆத்மாவும்,மரணத்தை சுபீட்சே தீரும் என்பது.இந்த உலகில் மனிதன் பிறந்தது முதல் அவனது மரணம் வரை ஆற்றுகின்ற பணிகளின் மொத்தம் வடிவமாக, அந்த மனிதனுக்கு உலகத்தில் கிடைக்கும் நன்மைகளும்,மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பும் மிக முக்கியமானதாகும்.

இலங்கை அரசியலில் உருவாக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் வரிசையில் அல்ஹாஜ்.ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்கள் தனியாக பேசப்பட வேண்டியவர்கள்.குறைகளை பேசுவதை விட அவரது நிறைகளையும்,அவர்களது பணிகளையும் வரவேற்று அவரது மறுமை வாழ்வுக்கு பிரார்த்திக்க வேண்டியது முஸ்லிமிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகின்ற முக்கிய அம்சமாகும்.

அநத அடிப்பைடயில் இறையடி எய்தியுள்ள மர்ஹூம் அஸ்வர் அவர்கள் நாம் பற்றி நாம் பேசுவோம் என்றஅழைப்பினைவிடுக்க விரும்புகின்றேன்.

மர்ஹூம் அல்ஹாஜ்.அஸ்வர் அவர்கள் அரசியல் ரீதியாக பல பதவிகளை வகித்துவந்துள்ளதுடன்,ஆரம்ப பணியாக ஒரு ஆசிரியராக தமது வாழ்க்கையில் பதிவையிட்டுள்ளார்.இவரது இந்த துறை தான் அன்னாரை இவ்வளவு உயரத்திற்கு கொண்டுவந்துள்ளது என்ற உண்மையினையும் நாம் அறிந்து கொள்ளும் சந்தர்ப்பமாக அன்னாரது இழப்பின் மூலம் அறியமுடிகின்றது.

இலங்கையின் முற்போக்கு அரசியல் கட்சி ஒன்றின் மூலம் அரசியலுக்கு பிரவேசித்த மர்ஹூம் ஏ.ஏச்.எம்.அஸ்வர் அவர்கள் இந்த நாட்டு ஜனாதிபதிகளாக  இருந்த பலரின் பெயர் புகழ் பெற பணியாற்றிவர்.ஜனாதிபதிகளின் உரைகளை மொழிபெயர்ப்பு செய்கின்ற போது அவரது நாவில் இருந்து வருகின்ற சொற்கள் கேட்பதற்கு என்றும் இனிமையானதாக இருக்கும்.60வயது கடந்தும் அவர் செய்யும் மொழி பெயர்ப்புக்களும்,பாராளுமன்ற உரைகளும் கணீரென காதுகளில் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.மர்ஹூம் அஸ்வர் ஹாஜியார் அவர்கள் புத்தளம் மக்களுக்கு பணியாற்றவென முன்னாள் ஜனாதிபதிஆர் பிரேமதாசவிடம்  புத்தளம் அரசியல் தலைமைகளும்,மக்களும் விடுத்த வேண்டுகோளின் பெயரில் அன்னார் தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டு புத்தளம் மக்களுக்கு பணியாற்றலானார்.மர்ஹூம் பிஸ்ருல் ஹாபி அவர்களின் இல்லத்திற்கு வருகைத்தரும் மர்ஹூம் அஸ்வர் அவர்கள் ஊடகவியலாளர்களை அழைத்து பேசுவார்.சுகம் விசாரிப்பார்.அத்தோடு அவர் முஸ்லிம் சமய கலாசார இராஜாங்க அமைச்சராக இருந்த போது,முன்னாள் ஆசிரியர் புத்தளத்தை சேர்ந்த தற்போது வர்த்தக துறையில் ஈடுபட்டுள்ள எஸ்.ஆர்.எம்.எம்.ஹினாயத்துல்லா அவர்களை இணைப்பு செயலாராக நியமித்து புத்தளம் மக்களுக்கு பணிகளை இலகுபடுத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்து கொடுத்தவர் மர்ஹூம் அஸ்வர் அவர்கள்.

எப்போது கண்டாலும் புன்முறுவலுடன் பெயர் கூறி என்ன செய்தி என்று கேட்டுவிட்டு தான் விடயங்களை பேசும் ஒருவராக அஸ்வர் ஹாஜியார் இருந்து வந்துள்ளார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அங்கத்தவராக இருந்து ஊடகவியலாளர்களுக்கு தேவையான அறிவை பெற்றுக் கொள்ளும் ஆக்க பூர்வமான கருத்துக்களை வழங்கிய பெருந்தகையென்று மர்ஹூம் அஸ்வர் அவர்களை எம்மால் பார்க்க முடிகின்றது.அத்தோடு மட்டுமல்லாது சிறந்த நேர்முக வர்ணனையாளராக தமது முழுமையான மொழி ஆற்றலைக் கொண்டு மும்மொழியில் தடம் பதித்த ஒருவராக ஊடக உலகத்தில் அன்னாரை நினைவுபடுத்த முடியும்.

பாராளுமன்றத்தில் முழு நேர பணியாளரை போன்று ஆளும் அரசாங்கத்துக்கு எதிரணியிலிருந்து வரும் ஏவுகனைகளுக்கு தகுந்த ஆதார பூர்வமான பதில்களை மும்மொழிகளிலும் வழங்கும் ஆற்றலை அல்லாஹ் அவருக்கு கொடுத்திருந்தான.அத்தோடு மட்டுமல்லாது இஸ்லாத்தின் தெளிவினையும் தமது உரையுடன் கலந்து பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் பதிவுகளை பார்க்கின்ற போது அவர் இஸ்லாத்திற்காக செய்துள்ள பங்களிப்பு என்பது மிகவும் வரவேற்புக்குரியது. இவ்வாறு எல்லா சந்தர்ப்பங்களிலும் அவரது பணிகள் சமூகத்திற்காகவே அமைந்திருந்த்தாக கூறுவது அன்னாரின் பணிகளுக்கு எம்மால் வழங்கப்படும் நற்சான்றாகும்.

மர்ஹூம் அஸ்வர் அவர்களின் அன்பான அரவனைப்பை எம்மால் மறக்க முடியாது கொழும்பு கொள்ளுப்பிட்டி ரேனுகா ஹோட்டலில் ஒரு முறை இடம் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மாநாட்டுக்கு எனது குடும்பம் சகிதம் வரக் கூடிய சந்தர்ப்பம் கிட்டியது.அங்கு வருகைத்தந்திருந்த அரசியல் பிரமுகர்களில் எனது மகன் அஹமத் அஸ்ஜத் விரும்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்றும் மர்ஹூம் அஸ்வர் ஹாஜியார் அவர்களின் நினைவலைகளை மீட்டிப்பாரக்க துண்டுகின்றது.

யா அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தவூஸ் என்னும் உயர் சுவனத்துக்குள் நுழையச் செய்வாயாக,அன்னாரது பணிகளை பொருந்திக் கொள்வாயாக,ஆமின்…ஆமின்…யாரப்பல் ஆலமின்..

1 கருத்துரைகள்:

May Almighty Allah Grant him highest level in jannah

Post a Comment