Header Ads



கட்டாரின் அனுமதிக்காக காத்திருக்கும், சவூதி விமானங்கள்


டோஹா விமானநிலையத்தில் தரையிறங்க கட்டாரிடம் அனுமதி பெற முடியாத நிலையில் கட்டார் நாட்டு யாத்திரிகர்களை சவூதிக்கு அழைத்துவர விமானங்களை அனுப்ப முடியாதிருப்பதாக சவூதி அரேபிய அரச விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சவூதி அரேபியா, மேலும் மூன்று அரபு நாடுகளுடன் இணைந்து கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்திருக்கும் நிலையில் அந்த நாட்டுடனான போக்குவரத்து நடவடிக்கைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. கட்டார் தீவிரவாதத்திற்கு உதவுவதாக குற்றம் சாட்டியே அண்டை நாடுகள் கடந்த ஜுன் மாதம் இந்த நடவடிக்கையை எடுத்தன.

எனினும் கட்டார் யாத்திரிகர்கள் ஹஜ் கடமைக்கு வருவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று சவூதி அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது.

வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்நாளில் ஒரு தடவை செய்யும் ஹஜ் கடமைக்கு உலகெங்கும் இருந்து 2 முதல் 3 மில்லியன் மக்கள் மக்கா நகரில் ஒன்றிணைகின்றனர். இந்நிலையில் கட்டார் ஹஜ் யாத்திரிகர்களுக்காக மூடப்பட்ட சவூதிக்கான கட்டார் எல்லை மீண்டும் திறக்கப்பட்டு, காட்டார் யாத்திரிகர்களை அழைத்து வர விமானங்களை அனுப்பவும் சவூதி மன்னர் சல்மான் கடந்த வாரம் உத்தரவிட்டார். இதன்போது கட்டார் யாத்திரிகர்களுக்கு தனது சொந்த செலவில் வசதிகளை செய்து கொடுப்பதாகவும் மன்னர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் காட்டாரிடம் இருந்து இன்னும் அனுமதி கிடைக்காத நிலையில் யாத்திரிகர்களை அழைத்து வருவதற்கு சவூதியால் விமானங்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக விமான சேவையின் பொது இயக்குனர் சலெஹ் அல் ஜஸ்ஸார் குறிப்பிட்டுள்ளார்.

விமானத்தை தரையிறக்குவதற்கு பல தினங்களுக்கு முன்னரே அனுமதி கோரப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இதற்கு கட்டார் அரச தரப்பு உடன் எந்த பதிலும் அளிக்கவில்லை.

எனினும் கட்டார் யாத்திரிகர்களுக்காக எல்லையை திறந்து விட்டது மற்றும் விமான வசதிகளை செய்து கொடுத்த சவூதியின் அறிவிப்பை கட்டார் கடந்த வாரம் வரவேற்றபோதும், இந்த நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது என்று கூறியது.

கட்டார் மீதான பயண கட்டுப்பாடுகள் அந்நாட்ட ஹஜ் யாத்திரிகர்களை பாதிக்காது என்று சவூதி ஏற்கனவே உறுதி அளித்திருந்தது. எனினும் ஹஜ் கடமைக்கான பயண ஏற்பாடுகளை செய்வதில் சிக்கலை எதிர்கொண்டு வருவதாக கட்டார் நாட்டவர் குறிப்பிட்டுள்ளனர். கட்டார் யாத்திரிகர்கள் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் தரைவழி எல்லை ஊடாக வர ஆரம்பித்திருப்பதாக சவூதிக்கு சொந்தமான அல் அரபியா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது.

புனித யாத்திரையை சவூதி அரேபியா அரசியலாக்குவதாக கட்டார் கடந்த மாதம் மதச் சுதந்திரம் தொடர்பான ஐ.நா சிறப்பு தூதுவரிடம் முறையிட்டமை குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. Today in the electronic modern age, Saudi has been behaving like Bidoun if Arabia..it should accept that what it did for Qatar was utter mistake and wrong ..what it should do is make a public apology for Qatar and left all its blockage and come to terms with Qatar now..
    How millions Hahji people would have affected by this stupid measure of Saudi.it is in the interest of both countries to come to terms?
    If Qatar people did not go to hajj it would be fault of Saudi government..
    What a political miscalculation is this ?

    ReplyDelete

Powered by Blogger.