Header Ads



புதிய நீதியமைச்சராக, இவரின் பெயரும் முன்மொழிவு


நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்காக நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா நாளை -25- பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை நிறைவேற்றத் தவறிய குற்றச்சாட்டிற்காக விஜயதாஸ ராஜபக்‌ஷவை அவரின் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி நேற்று ஏற்றுக் கொண்டிருந்தார். 

அதன்படி இதுவரை வகித்த அமைச்சுப் பதவிகளில் இருந்து விஜயதாஸ ராஜபக்‌ஷ நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளார். 

புதிதாக அந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ள காமினி ஜயவிக்ரம பெரேரா ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராவார். 

1977ம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் ரணில் விக்ரமசிங்கவுடன் பாராளுமன்றத்திற்கு சென்ற அவர், தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலருள் அவரும் ஒருவர் என்பது கூறத்தக்கது. 

No comments

Powered by Blogger.