Header Ads



என்னை விமர்சனம்செய்ய, உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது..?

ஜேர்மனி நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் தனது வார்த்தைகளை சரியான விதத்தில் பயன்படுத்தி பேச வேண்டும் என துருக்கி ஜனாதிபதியான எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜேர்மன் நாட்டில் அடுத்த மாதம் 24-ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் துருக்கி ஜனாதிபதியான எர்டோகன் ஜேர்மன் தலைநகான பெர்லினுக்கு சென்றுள்ளார்.

அப்போது ‘துருக்கியை பூர்வீகமாக கொண்டு ஜேர்மனியில் வசித்து வரும் நபர்கள் ஆளும் கட்சியான Christian Democratic Union (CDU) மற்றும் கூட்டணி கட்சியான Social Democratic Party (SPD) ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் வாக்களிக்க கூடாது.

துருக்கியை வெறுக்காத கட்சிக்கு மட்டுமே துருக்கியர்கள் வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி எர்டோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதியின் இப்பேச்சிற்கு ஜேர்மன் நாட்டு வெளியுறவு துறை அமைச்சரான Sigmar Gabriel கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

‘ஜேர்மன் நாட்டு தேர்தலில் துருக்கி ஜனாதிபதி தலையிட வேண்டிய அவசியம் இல்லை’ என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அமைச்சரின் விமர்சனத்தை தொடர்ந்து துருக்கி ஜனாதிபதி ஒரு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதில் ‘ஜேர்மன் வெளியுறவு துறை அமைச்சர் வார்த்தைகளை சரியாக பயன்படுத்த வேண்டும். துருக்கி ஜனாதிபதியான என்னை விமர்சனம் செய்ய உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? நீங்கள் எத்தனை ஆண்டுகள் அரசியலில் இருந்து வருகிறீர்கள்? உங்கள் வயது என்ன?’ என கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

ஜேர்மனியில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இரு நாடுகளும் இருவருக்கு ஒருவர் கடுமையான விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.