August 09, 2017

இலங்கையின் 'இந்நிலை' பாதுகாக்கப்பட வேண்டும் - துருக்­கியின் முன்னாள் பிர­தமர்

-ARA.Fareel-

இலங்கை பல்­க­லா­சா­ரத்­திற்கு மிகச் சிறந்த உதா­ர­ணங்­களைக் கொண்ட நாடாகும். இலங்­கையின் இந்த நிலையை நேரில் கண்டு நான் பெரு­மைப்­பட்டேன். இந்த நிலை பாது­காக்­கப்­பட்டு மேலும் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும் என இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள துருக்­கியின் முன்னாள் பிர­தமர் பேரா­சி­ரியர் அஹ்மத் தாவு­டொக்லு தெரி­வித்தார்.

தேசிய ஐக்­கி­யத்­துக்­கான பாக்கீர் மாக்கார் நிலையம் ஏற்­பாடு செய்­தி­ருந்த 20 ஆவது வருட பாக்கீர் மாக்கார் நினைவுப் பேருரை நேற்று மாலை  பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில்  நடை­பெற்­றது. இந் நிகழ்வில் நினைவுப் பேருரை நிகழ்த்­து­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

தேசிய ஐக்­கி­யத்­துக்­கான பாக்கீர் மாக்கார் நிலை­யத்தின் தலைவர் இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் தலை­மையில் நடை­பெற்ற இந் நிகழ்வில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க, எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் உட்­பட அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், சமயத் தலை­வர்கள், கல்­வி­மான்கள், பாக்கீர் மாக்கார் குடும்ப உறுப்­பி­னர்கள் என பலரும் கலந்துகொண்­டனர். இங்கு பேரா­சி­ரியர் தாவு­டொக்லு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் , 

'பல்­க­லா­சாரம் சமா­தா­னத்தின் அடிப்­படை 'எனும் இந்தத் தலைப்பு இலங்­கைக்கு மாத்­தி­ர­மல்ல துருக்­கிக்கும் முழு உலகுக்குமே பொருத்­த­மா­ன­தாகும்.  இலங்­கைக்கு வரு­மாறு சகோ­தரர் இம்­தியாஸ் பாக்கீர் மாக்­கா­ரி­ட­மி­ருந்து எனக்கு அழைப்பு கிடைத்த போது உட­ன­டி­யா­கவே அந்த அழைப்பை ஏற்றுக் கொள்­ளு­மாறும் அதற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­யு­மாறும் நான் எனது அணி­யி­னரை வேண்டிக் கொண்டேன். அதற்கு பல கார­ணங்கள் இருந்­தன. அதி­லொன்று கடந்த வருடம் நான் இலங்கைப் பிர­த­மரை டாவோஸில் சந்­தித்த போது நான் விரைவில் இலங்­கைக்கு வருவேன் என அவ­ரிடம் உறுதி மொழி வழங்­கி­யி­ருந்தேன். எனக்கு இலங்­கையின் புவி­யியல் அமை­விடம் மீதும் இந்த நாட்டின் கலா­சாரம், பாரம்­ப­ரியம் மீதும் விசேட ஆர்வம் இருப்­பதும் மற்­றொரு கார­ண­மாகும்.

நான் இலங்கை வரு­வ­தெனத் தீர்­மா­னித்த போது எனது மனை­வி­யையும் பிள்­ளை­க­ளையும் பேரப் பிள்­ளை­க­ளையும் என்­னுடன் வரு­மாறு அழைத்தேன். அதற்குக் காரணம் இலங்­கையின் பல்­க­லா­சாரம் தொடர்பில் அவர்கள் நேரில் கண்­ட­றிந்து கொள்­வ­தற்­கான சிறந்த வாய்ப்பு இது என்­ப­த­னா­லாகும். நாங்கள் கண்­டிக்குச் சென்ற போது அங்கு இடம்­பெற்ற பெர­ஹ­ராவை குடும்­பத்­துடன் கண்டு களித்தோம். அதில் சிங்­க­ள­வர்­க­ளி­னதும் தமி­ழர்­க­ளி­னதும் கலா­சா­ரங்­களைப் பிர­தி­ப­லிக்கும் பல நிகழ்­வுகள் இடம்­பெற்­றன. இது பல்­க­லா­சா­ரத்­திற்கு நல்ல எடுத்­துக்­காட்­டாகும்.

நான் கண்­டிக்குச் சென்ற போது மல்­வத்து மகா­நா­யக்க தேரரைச் சந்­தித்துப் பேசினேன். நாங்கள் இரு­வரும் இஸ்லாம் தொடர்­பிலும் பௌத்தம் தொடர்­பிலும் கருத்­துக்­களைப் பரி­மாறிக் கொண்டோம்.  நாம் நமக்­கி­டையே புதிய மனப்­பாங்­கையும் புதிய அணு­கு­மு­றை­க­ளையும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான சரி­யான நேரம் இது என நான் கரு­து­கிறேன். ஆனால் ஒரு கல்­வி­மா­னாக , முன்னாள் பிர­த­ம­ராக , முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக இருந்­தவன் என்ற வகையில் அதை­யெல்லாம் விட முக்­கி­ய­மாக நான் ஒரு மனிதன் என்ற வகையில் நான் இந்த உல­கத்தின் எதிர்­காலம் குறித்து மிகவும் கவ­லைப்­ப­டு­கிறேன். 

சமீ­பத்தில் சில முஸ்லிம் நாடுகள் எடுத்­துள்ள தீர்­மா­னங்கள், ஐரோப்­பாவில் இஸ்­லா­மோ­போ­பியா அதி­க­ரித்து வரு­கின்­றமை, மத குழுக்­க­ளி­டையே தீவி­ர­வாதப் போக்கு வளர்ந்து வரு­கின்­றமை தொடர்பில் நாம் மிகவும் கவ­ன­மாக இருக்க வேண்டும். இவற்றால் வரு­கின்ற சவால்­களை எதிர்­கொள்ள நாம் நம்மைத் தயார்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். 

நான் இலங்­கையில் தங்­கி­யி­ருந்த இந்த நாட்­களில் பல தொடர் சந்­திப்­பு­களில் கலந்து கொண்டேன். குறிப்­பாக சகல இனங்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முன்­னணி ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளையும் இளைஞர் குழு­வி­ன­ரையும் தனித்­த­னி­யாக இன்று காலை சந்­தித்தேன். குறிப்­பாக இளை­ஞர்கள் குழுவில் முஸ்­லிம்கள், சிங்­க­ள­வர்கள், தமி­ழர்கள், கிறிஸ்­த­வர்கள் என சகல இனங்கள், மதங்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பலர் இருந்­தார்கள். அவர்­களால் நான் மிகவும் கவ­ரப்­பட்டேன். நாம் மிகவும் சிறப்­பான கலந்­து­ரை­யாடல் ஒன்றை மேற்­கொண்டோம்.  இலங்கை மிகவும் உறு­தி­யான பல்­க­லா­சா­ரத்தைக் கொண்­டி­ருக்­கி­றது எனும் செய்­தியை நான் இதன் மூலம் பெற்றுக் கொண்டேன்.

உலகில் பல்­க­லா­சா­ரத்தை நான்கு வழி­மு­றைகள் மூல­மாக கட்­டி­யெ­ழுப்ப முடியும் என நான் கரு­து­கிறேன். முத­லா­வது சமூக மட்­டத்தில், இரண்­டா­வது தேசிய மட்­டத்தில், மூன்­றா­வது பிராந்­திய மட்­டத்தில் , நான்­கா­வது உல­க­ளா­விய ரீதியில் என இதனை வகைப்­ப­டுத்த முடியும். அந்த வகையில் பல்­க­லா­சா­ரமே சமா­தா­னத்தின் அடிப்­படை என நான் உறு­தி­யாக நம்புகிறேன். நான் பிரதமராக இருந்த காலத்திலிருந்து இதனையே அடிக்கடி வலியுறுத்தி வருகிறேன். 

நான் கொழும்பில் பயணிக்கும் போது பௌத்த விகாரைகள், பள்ளிவாசல்கள், கோயில்கள், தேவாலயங்கள் என்பன மிக அருகருகே அமைந்திருப்பதை கண்டு பெருமைப்பட்டேன். இதுவே பல்கலாசாரத்தினதும் சமாதானத்தினதும்  இரகசியமாகும்.  இந்த நிலை பாதுகாக்கப்பட வேண்டும். இந்த மரபு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

3 கருத்துரைகள்:

pahalle parkumpothu alahahe irikkum pallihelil irevu ninru parungel, ungal thalaiyilum kal vilumpothu puriyum SRILANKA vin amaithiyum samathanemum

He is a real Muslim and bring the teachings of Islam and teachings of Prophet Muhammad (PBUH) to the light. These are to be followed to maintain the brotherhood among multi cultured societies to restore peace. Good for all Srilankan.

He is a real Muslim and bring the teachings of Islam and teachings of Prophet Muhammad (PBUH) to the light. These are to be followed to maintain the brotherhood among multi cultured societies to restore peace. Good for all Srilankan.

Post a Comment