Header Ads



"பௌத்த புண்ணிய பூமியான இந்த நாட்டில்..." ஜனாதிபதி

நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துப்போட்டு ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு எவர் கனவு கண்டாலும் அதற்கு எனது விருப்பத்தையும், ஆசீர்வாதத்தையும் பெற்றக்கொள்ளவேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹிங்குராக்கொட வலய கல்வி அலுவலக புதிய கட்டட திறப்பு விழாவில் நேற்றைய தினம் கலந்துக் கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டின் முன்னேற்றத்துக்கான தடைகளை அகற்றி தற்போதைய அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.

எனினும், வெற்றுகோஷமிடுவோர் நாட்டில் பல்வேறு குழப்பநிலையை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர்.

நல்ல விடயங்களில் ஈடுபடுவோருக்காக அன்றி, வெற்று கோஷமிடுபவர்களுக்கே இன்று சில ஊடகங்களில் இடம் வழங்கப்படுகின்றது.

அதன் காரணமாக நாட்டில் சிலர் அரசுதொடர்பில் தவறான புரிதலை ஏற்படுத்தியிருக்கின்றனர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தவறு செய்வோருக்கு நாட்டில் இருப்பு இல்லை. பௌத்த புண்ணிய பூமியான இந்த நாட்டில் நியாயமான சமூகத்தை நோக்கி பயணிப்பவர்கள் மட்டுமே நிலைத்திருக்க முடியும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Good joke that an Sri lanka is a Bhudist holy land??

    ReplyDelete

Powered by Blogger.