Header Ads



இலங்கைக்கு வழங்கப்பட்ட 600 கோட்டாக்களும் விநியோகம்


சவூதி அரே­பிய ஹஜ் அமைச்­சினால் இறுதி நேரத்தில் வழங்­கப்­பட்ட மேல­திக 600 ஹஜ் கோட்­டாக்­களும் (விசாக்கள்) நேற்று மாலை பூர­ணப்­ப­டுத்­தப்­பட்­டன.

நாட்டின் பல பாகங்­க­ளி­லி­ருந்தும் ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளூ­டாக பய­ணிகள் நேற்று தம்மைப் பதிவு செய்து கொண்­டனர்.

ஹஜ் கட்­ட­ண­மாக 3 இலட்­சத்து 75 ஆயிரம் ரூபா முதல் 4 இலட்­சத்து 50 ஆயிரம் ரூபா வரை ஹஜ் முக­வர்­களால் அற­வி­டப்­பட்­டுள்­ளன.

இது தொடர்பில் அரச ஹஜ் குழுவின் உறுப்­பி­னரும் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கா­ரங்கள் அமைச்­ச­ரு­மான எம்.எச்.ஏ. ஹலீமின் பிரத்­தி­யேக செய­லா­ள­ரு­மான எம்.எச்.எம். பாஹிம் கருத்து தெரி­விக்­கையில்,

ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்கு மேலும் பலர் ஆர்­வ­மாக இருக்­கி­றார்கள். இறுதி நேரத்தில் இலங்­கைக்கு 600 ஹஜ் விசாக்கள் கிடைத்­தமை எமக்குக் கிடைத்த பாக்­கி­ய­மாகும். மேல­திக 600 ஹஜ் பய­ணி­களும் எதிர்­வரும் 26 ஆம்  27 ஆம் திக­தி­களில் பய­ணிக்­க­வுள்­ளார்கள். அதற்­கான ஏற்­பா­டு­களை அரச ஹஜ் குழுவும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் மேற்­கொண்­டுள்­ளன.

சவூதி அரே­பி­யாவில் மக்கா, மதீனா அஸீ­ஸி­யாவில்  இவர்­க­ளுக்­கான தங்­கு­மிட வச­திகள் தற்­போது சவூ­தி­யி­லுள்ள இலங்கை ஹஜ் முக­வர்கள் ஊடாக ஏற்­பாடு செய்­யப்­ப­ட­வுள்­ளன.

-ARA.Fareel-

No comments

Powered by Blogger.