Header Ads



மாணவன் செலுத்திய கார், மின் கம்பத்தை முத்தமிட்டு 4 பேர் வைத்தியசாலையில்..!

ஆராச்­சிக்­கட்டு அடிப்­பள வீதியில் கார் ஒன்று வேகத்தைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல்  வீதியை விட்டு விலகி மின் கம்பம் ஒன்றில் மோதி இடம்­பெற்ற விபத்தில் 16 மற்றும் 17 வய­தான நான்கு பாட­சாலை மாண­வர்கள் காயங்­க­ளுக்கு உள்­ளாகி சிலாபம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக ஆராச்­சிக்­கட்டு பொலிஸார் தெரி­வித்­தனர்.  ஆராச்­சிக்­கட்டு பண்­டா­ர­ஹேன எனும் பிர­தே­சத்தைச் சேர்ந்த மாண­வர்­களே இவ்­வாறு விபத்தில் காயங்­க­ளுக்கு உள்­ளா­ன­வர்­க­ளாவர்.

விபத்தில் காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள மாண­வர்­களின் நிலை ஆபத்­தா­ன­தாக இல்லை என வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன. 

எனினும், இவ்­வி­பத்­தினால் கார் பலத்த சேதத்­திற்கு உள்­ளா­கி­யுள்­ள­தோடு, அக்கார் மோதிய மின்­கம்­பமும் முறிந்து வீழ்ந்­தது. காரும் குடை­சாய்ந்­தது. இந்தச் சம்­ப­வத்­தினால் அப்­பி­ர­தே­சத்­துக்­கான  மின் விநி­யோகம்  தடை­பட்­டுள்­ள­தா­கவும்  தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  வாக­னத்தைச் செலுத்­திய மற்றும் காரில் பய­ணித்த எந்த ஒரு­வ­ரி­டத்­திலும் சாரதி அனு­ம­திப்­பத்­திரம் இல்லை எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

வீட்டார் வீட்டில் இல்­லாத சம­யத்தில் கார் ஓட்டும் ஆசையில் வீட்­டி­லி­ருந்து காரை எடுத்துக் கொண்டு அயலில் வசிக்கும் நண்­பர்­க­ளோடு இவ்­வாறு வீதியில் சென்று கொண்­டி­ருந்­த­தாக விபத்தில் சிக்­கிய மாண­வர்கள் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்­ளனர். 

விபத்தின் தன்­மையைப் பார்க்கும் போது மாண­வர்கள் பலத்த காயங்­க­ளின்றி தப்­பி­யமை ஆச்­ச­ரி­ம­ளிக்­கின்­றது என்றும் வாக­னங்கள் இருக்கும் பெற்றோர் தமது பிள்­ளை­க­ளுக்கு வாகனங்களை வழங்கும் போது மிகவும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். ஆராச்சிக்கட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.