Header Ads



இங்கிலாந்தில் சயித் அப்ரிடி 42 பந்தில், சதம் அடித்து அசத்தல்


இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நாட்வெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சயித் அப்ரிடி 42 பந்தில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்தின் பிரபல டி20 தொடரான நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் பெர்பில் நடந்த காலிறுதிப் போட்டியில் வின்ஸ் தலைமையிலான Hampshire அணியும், வில்சன் தலைமையிலான Derbyshire அணியும் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வென்ற Derbyshire அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன் படி Hampshire அணிக்கு துவக்க வீரராக அப்ரிடியும், டிக்கின்சனும் களமிறங்கினர்.

டிக்கின்சன் 18 ஓட்டங்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்களில் அணியின் தலைவர் வின்சை தவிர மற்ற வீரர்கள் சொதப்பினாலும் ஒன் மேன் ஆர்மியாக அப்ரிடி அதிரடி காட்டினார்.

42 பந்துகளை சந்தித்த அவர் சதம் கடந்தார். இதில் 10 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கள் அடங்கும். இவரைத் தொடர்ந்து அணியின் தலைவர் வின்ஸ் 55 ஓட்டங்கள் குவித்தார்.

இறுதியாக Hampshire அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 249 ஓட்டங்கள் குவித்தது.

250 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய Derbyshire அணியின் வீரர்கள் அதிரடி காட்ட முயற்சி செய்து வந்த வேகத்தில் பெளலியன் திரும்பினர்.

இதனால் Derbyshire அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ஓட்டங்கள் எடுத்து, 101 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அப்ரிடியின் இந்த அதிரடி சதத்தைக் கண்ட கிரிக்கெட் வீரர்கள் பலரும் பூம் பூம் அப்ரிடிக்கு வாழ்த்துக்கள் என்று பதிவேற்றம் செய்துள்ளனர்.

மேலும் சதம் விளாசிய அப்ரிடி, டி-20 அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.