Header Ads



மத்தள விமானநிலைய மாதாந்த வருமானம் 40 லட்சம் - செலவு 250 லட்சம்


மத்தள விமான நிலையத்தை இந்திய முதலீட்டாளர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்குவதற்காக தற்போது பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதியமைச்சர் அசோகா அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய முதலீட்டாளர் மற்றும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமானதாக அமைந்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

மத்தள விமான நிலையத்தில் இருந்து மாதாந்தம் 40 லட்சம் ரூபாவே வருமானமாகக் கிடைக்கின்றது. ஆனால் செலவு 250 லட்சம் ரூபா. தினமும் மூன்று விமானங்களே மத்தள விமான நிலையத்திற்கு வருகின்றன. 

கடனை செலுத்த மாதாந்தம் 3 ஆயிரம் லட்சம் ரூபா செலவிடப்படுகிறது. வருடாந்தம் 360 கோடி ரூபா என்ற கணக்கில் 8 வருடங்களுக்கு இலங்கை கடனை செலுத்த வேண்டியுள்ளது.

மத்தள விமான நிலையத்தை நிர்மாணிக்க ராஜபக்ச அரசாங்கம் 4 ஆயிரம் கோடி ரூபாவை செலவிட்டுள்ளது. 

அரசாங்கத்தினால் இந்த கடனை தொடர்ந்தும் சுமக்க முடியாது.

இதனால், அம்பாந்தோட்டை துறைமுகத்தை போல் மத்தள விமான நிலையத்தையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதியமைச்சர் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.