Header Ads



ஆகஸ்ட் 3 உம், அரக்கத்தனமும்...!!


Mohamed Nizous
==================

இருபத்தேழு ஆண்டு முன்னால்
இதே போன்ற ஒரு நாளில்
இருளிலே வெடிச் சத்தம்
இஷாவின் பின் உலுக்கியது

புலி நாய்கள் பூந்து
புள்ளைகளையும் ஆட்களையும்
பலியாக்கிப் போட்டாண்டா
பாதையிலே அவலக் குரல்.

பக்கத்துப் பள்ளிக்கு
பறந்து வந்த செய்து கேட்டு
திக்கற்று ஓடினோம்
விக்கித்துப் போனோம்

அள்ளாஹ் அள்ளாஹ் என்று
அடங்கும் உயிரோடு
பிள்ளைகள் துடி துடிக்க..
உள்ளம் நொறுங்கியது

இருண்ட பள்ளிக்குள்
எங்கும் மரண ஓலம்
கரண்டிக் கால் நனைய
காட்டாறாய் ரத்தம்

காயப் பட்டோரை
கைகளால் தூக்கும் போதே
சாய்கின்ற தலை கண்டு
வாய் விட்டு அழுதோம்.

கலிமாவைச் சொல்லி
கண்களை மூடி விட்டோம்
புலி நாயைப் பிடித்து
பொசுக்க வெறி கொண்டோம்

நூற்றி சொச்சம் உறவுகளை
நொடியிலே இழந்த கவலை
ஆற்ற முடியாக் காயமாக
அடி மனதில் இருக்கு இன்னும்

வெறி பிடிச்சு சுட்டவன்கள்
வேரோடு அழிந்து போனான்.
இறைவனின் தண்டனைகள்
இறங்குதைத் தடுப்பது யார்?

இருபத்தேழு ஆண்டு முன்னால்
இதே போன்ற ஒரு நாளில்
உயிர் பிரிந்த அவர்களுக்கு
உயர் சுவர்க்கம் கிடைக்கட்டும்

4 comments:

  1. may allah grant them highest place in jannah

    ReplyDelete
  2. جزاكم الله خيرا

    ReplyDelete
  3. இதயத்தை உலுக்கும் படமும் கவிதையும்...
    ஆனால்.....
    சில கேவலமான வசனங்களை தவிர்த்திருந்தால் நன்று.
    நடு நிலையான முஸ்லிமல்லாதவர்கள் தாராளமாக உண்டு.
    அவர்களை காயப்படுத்தும் செயல்களை எப்போதும் தவிர்ப்போம்..
    தற்போதைய கள சூழலை அறிவோம்...
    எல்லா சந்தர்ப்பங்களையும் இஸ்லாத்தின் செய்தியை சொல்லப் பயன்படுத்துவோம்

    ReplyDelete

Powered by Blogger.