Header Ads



அரசாங்கத்தின் பலம் வீழ்ச்சி, 28 பேர் மஹிந்த­வுடன் இணை­­வர்

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 28 பேர் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் இரண்டாம் திக­தி­ய­ளவில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் இணை­ய­வுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தெரி­வித்­துள்ளார். 

கொழும்பில் நேற்று நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

மத்­திய வங்கி பிணை­முறி மோசடி மூலம் பெறப்­பட்ட பணம் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­விற்கு மாத்­திரம் செல்­ல­வில்லை. கடந்த பாரா­ளு­மன்ற தேர்தல் காலத்தில் ஐக்­கிய தேசியக் கட்சி அமைப்­பா­ளர்­க­ளுக்கு ஐம்­பது இலட்சம் ரூபா வரையில் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளது. அப்­பணம் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­த­ாவி­லி­ருந்தே பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளது. எனவே அப்­பணம் மத்­திய வங்கி பிணை­முறி மோசடி மூலம் பெறப்­பட்­ட­தாகும்.

மேலும் தற்­போது நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்குள் உள்­ளக ரீதியில் பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. அமைச்சர் டிலான் பெரேரா சுதந்­திரக் கட்­சியின் செய­லாளரை அப்­ப­த­வி­யி­லி­ருந்து வில­கு­மாறு குறிப்­பிட்­டுள்ளார். அமைச்சர் விஜே­தாஸ ராஜ­பக் ஷ  பீல்ட்­மார்ஷல் சரத்­பொன்­சே­காவை கட்­சி­யி­லி­ருந்து வெளி­யேறுமாறு குறிப்­பிட்­டுள்ளார். மேலும் அர­சாங்­கத்தை ஆட்­சிக்கு கொண்­டு­வ­ரு­வதில் மிகுந்த பங்­க­ளிப்பு வழங்­கிய மக்கள் விடு­தலை முன்னணி தற்போது அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படுகிறது.

ஆகவே தற்போது அரசாங்கத்தின் பலம் சடுதியாக வீழ்ச்சி கண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Can MP and former Minister and a strong pillar of the Joint Opposition tell us who the Muslim Ministers and Parliamentarians are in this list of 28 hoping to join the “MAHINDA PELA” around the 2nd., of September 2017? “The Muslim Voice” is aware that there are more than 4 such deceptive Muslim politicians working very hard to pacify former Minister Basil Rajapaksa to pave the way for them to make this “poll-vault’ in September. Certain hints have also been indicated in the media about such moves. The Daily Mirror gossip column a few days ago had even carried a sketch drawing/news item about a Muslim political party leader who stabbed former President Mahinda Rajapaksa in the back during the run-up to the presidential elections in 2015 after enjoying all the perks and benefits selling the Muslim votes to Mahinda during the Mahinda Rajapaksa Regime.
    Noor Nizam - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.